பக்கம்:வைணவ உரைவளம்.pdf/509

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

486 வைணவ உரைவளம் என்ற சொற்றொடரைக் கேட்டு, சிறுமா மனிசரென்றால் சிறியராயும் பெரியராயும் உள்ள மணிசர் என்று பொரு ளல்லவா? ஒன்றுக்கொன்று எதிர்த்தட்டான சிறுமை பெருமை என்கின்ற குணங்களிரண்டும் ஒரு பொருளிடத்து ஒன்று சேர்ந்திருக்குமோ? ஆழ்வார் சிறுமா மனிசரென்று இரண்டையும் ஒரிடத்தே சேர அருளிச் செய்தது பொருந்து வது எங்ங்னம்? என்று திருத் தந்தையாரை வினவினார். அதற்கு ஆழ்வான் ஆலோசித்து, :பிள்ளாய்! நன்கு வினவி னாய்; உனக்கு உபநயனமாகாமையால் இப்போது வேத சாத்திரங்களைக் கொண்டு விடை சொல்லலாகாது; ஆகிலும் பிரத்தியட்சத்திற் காட்டுகின்றோம் காண்' என்று சொல்லிச் சில பெரியோர்களைக் காட்டி, திரு மேனி சிறுத்து ஞானம் பெருத்திருக்கின்ற சிறியாச்சான் அருளாளப் பெருமாள் எம்பெருமானார் போல்வாரைச் சிறுமாமணிசர் என்னத்தட்டில்லையே; முதலியாண்டான் : எம்பார் முதலிய பெரியோர்கள் உலகத்தாரோடொக்க அன்னபானாதிகள் கொள்வதோடு எம்பெருமான் பக்கல் ஈடுபடுவதிற் பரதபதத்து நித்திய சூரிகளைப் போலுதலால் இப்படிப்பட்டவர்கள் சிறுமா மணிசரென்னத் தக்கவ ரன்றோ? இங்ங்ணமே வடிவு சிறுத்து மகிமை பெருத்தவர் களும், மனிதரென்று பார்க்கும்போது சிறுமை தோன்றி னும் பகவத் பக்தி, ஞானம், அநுட்டானம் முதலிய நற் குணங்களை நோக்குமளவில் நித்திய முக்தர்களிலும் மேன்மை பெற்று விளங்குவர்களுமான மகாபுருஷர் களையே ஆழ்வார் சிறுமா மணிசர்" என்று குறித்தருளி னார் என்று அருளிச்செய்ய, பட்டரும் அது கேட்டுத்தகும், தகும்' என்று இசைவு கொண்டனர். 226 நல்ல கோட்பாட் டுலகங்கள் மூன்றி னுள்ளும் தான் நிறைந்த அல்லிக் கமலக் கண்ணனை அந்தண் குருகூர்ச் சடகோபன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வைணவ_உரைவளம்.pdf/509&oldid=921334" இலிருந்து மீள்விக்கப்பட்டது