பக்கம்:வைணவ உரைவளம்.pdf/515

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

492 வைணவ உரைவளம் மாயவன் அடிவாவிப்.புன்மை இலாதவர்க்கு : அழகு சீலம் முதலியவைகளால் ஆச்சரியப்படத் தக்கவனாகவுள்ள இறைவனுடைய குணங்களுக்குத் தோற்றவர்களாய் பிரீதியாலே அவன் திருவடிகளை முறை இன்னிக்கே ஏத்தி, அதனாலே போது போக்குதலைச் செய்வதாக அறுதி யிட்டுள்ள நன்மையை உடையவர்கள், சீரியர்கள். அதாவது வேறு பயன்களைக் கருதாத பூரீ வைணவர்கள். இப்படி அறுதியிட வேண்டியிருக்க, புன்மையிலாதவர்க்கு" என்று இடைப்பிறவரலாகப் புன்மையைச் சொல்லுவானேன்? என்று ஐயம் தோன்றும்; அதற்குப் பரிகாரமாகப் பட்டர் அருளிச் செய்வது: : இந்த மாயவன் அடிபரவுகையைச் குதுசதுரங்கம் போலே காலத்தைக் கழிப்பதற்கு வழியாகக் கொள்ளுகின்ற புன்மை இல்லாதவர்கள்' என்பதாக, தெரித்தெழுதி, வாசித்தும் கேட்டும் வணங்கி வழிபட்டும், பூசித்தும் போக்கினேன் போது’4 என்று கூறிய திருமழிசை யாழ்வாரைப்போல உலகில் எல்லாரும் போது போக்குவர் அல்லரே; சூதாடியும் சதுரங்கமாடியும் போதுபோக்குவார் பலருளரே. இச் செய்கைகளினால் ஒருவாறு போதுபோகிற தென்னுமளவேயல்லது அவை போக ரூபமாக உள்ளப வர்கள் என்பதற்குக் காரணம் இல்லேயே. பகவத் குணா துபவத்தையும் அங்ங்ணம் போது போக்குவதற்காகவே கொள்ளுவது புன்மையேயாம்: அதைப் பிரம்மாநந்த ரூபமாக குணாதுபவம் நடக்குமதுவே புன்மையிலாமை. இதைத் தெரிவிக்கைக்காகவே இங்கு ஆழ்வார் புன்மையி லாதவர்க்கு' என்று அருளிச் செய்தார் என்ப. 231 பண்டைநா ளாலே கின்திரு வருளும் பங்கயத் தாள்திரு அருளும் கொண்டு,கின் கோயில் சீய்த்துப்பல் படிகால் குடிகுடி வழிவந்தாட் செய்யும் 4. நான். திருவந், 63

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வைணவ_உரைவளம்.pdf/515&oldid=921341" இலிருந்து மீள்விக்கப்பட்டது