பக்கம்:வைணவ உரைவளம்.pdf/518

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவாய்மொழி 495 நோக்காய், நோக்காய்' என்று பல காலும் சொல்லிக் கொண்டிருந்தது மேலடியில் போக மாட்டாதே நின்றா ராம்; அப்போது கோஷ்டியில் வீற்றிருந்த அவரது திருத் தந்தையாரான ஆழ்வார் திருவரங்கப் பெருமாள் அரையர் எழுந்திருந்து பிள்ளாய்! நீ எம்பெருமான் திருவுள்ளம் புண்படும்படி இங்ங்ணம் பல காலும் சொல்லி நிர்ப்பந்திக்க லாமோ? அழகிய மிடற்றைத் தந்து, நல்ல பாசுரத்தைத் தந்து, பிள்ளைகளையும் செல்வத்தையும் தந்தருளியிருக்க ஒன்றும் செய்யாதாராக நினைத்து இன்னமும் நோக்காய், நோக்காய், நோக்காய்' என்றால் இஃது என்னே! மேலே பாடு என்றாராம். 23 1 புளிங்குடிக் கிடந்து வரகுண மங்கை இருந்துவை குந்தத்துள் கின்று தெளிந்தவென் சிங்தை அகங்கழி யாதே என்னையாள் வாய்எனக் கருதி நளிர்ந்தசீ ருலகம் மூன்றுடன் வியப்ப நாங்கள்கூத் தாடிகின் றார்ப்ப பனிங்குநீர் முகிலின் பவளம்போல கனிவாய் சிவப்பநீ காணவா ராயே." (கிடந்து-சயனித்து இருந்து-விற்றிருந்து: கழி யாதே-பிரியாதே; நளிந்தசீர்-குளிர்ந்த திருக்குணம்: ஆர்ப்ப-கோலாகலம் செய்ய: முகில்-மேகம்1 எல்லா உறவின் காரியமும் தபிக்குக் குறைவில்லாமல் அருளுமாறு ஆழ்வார் எம் பெருமானை வேண்டுவதாக அமைந்த திருவாய்மொழியில் இஃது ஒரு பாசுர ம். இதில் 7. திருவாய் 9.2:4

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வைணவ_உரைவளம்.pdf/518&oldid=921344" இலிருந்து மீள்விக்கப்பட்டது