பக்கம்:வைணவ உரைவளம்.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முதலாயிரம் 25 சொல்லி, அத்தேருக்கும் இவர்களுக்கும் திவ்விய ஆற்றலைத் தனது சங்கற்பத்தால் கற்பித்து இவ்வண்டத் துக்கு வெளியே நெடுந்துரம் அளவும் கொண்டு சென்று, அங்கு ஓரிடத்தில் தேருடனே இவர்களை நிறுத்தி, தன் நில மா ன பரமபதத்தில் தானே புக்கு, அங்கு நாச்சிமார் தங்கள் சுவாதந்திரம் காட்டுவதற்காகவும், கண்ணபிரானது திவ்விய செளந்தரியத்தைக் கண்டு களிப்பதற்காகவும் அழைப்பித்து வந்த அந்தப் பிள்ளைகள் நால்வரையும் அங்கு நின்றும் ஆதி உருவத்தில் ஒன்றும் குறையாமல் கொண்டு வந்து கொடுத்தருளினன் என்பது வரலாறு. இந்த இதிகாசம் பெரியாழ்வார் திருமொழி 4.8:2லும், பெரிய திருமொழி 5.8:8லும், திருவாய்மொழி 3.10:5லும் வந்துள்ளது. 2 மெச்சூது சங்க மிடத்தான்கல் வேயூதி பொய்ச்சூதில் தோற்ற பொறையுடை மன்னர்க்காய் பத்துார் பெறாதன்று பாரதம் கைசெய்த அத்துதன் அப்பூச்சி காட்டுகிள்றான் அம்மனே அப்பூச்சி காட்டுகின்றான்." |மெச் சூது-மெச்ச+ ஊது-அனைவரும் கொண் டாடும்படி ஊதுகின்ற; வேய்-புல்லாங்குழல்; கை செய்த-அணிவகுத்து செய்த; அப்பூச்சி. அப்படிப்பட்ட (மிகவும் பயங்கரமான) பூச்சி. கண்ணன் அப்பூச்சி காட்டுதல்பற்றிக் கூறும் பெரியாழ் வார் திருமொழியில் முதல் பாசுரம் இது. அப்பூச்சி காட்டு கையாவது-கண்ணை இறுத்துவது, மயிரால் முகத்தை மறைத்துக் காட்டுவது முதலாகச் செய்யும் பயங்கர பால 2. பெரியாழ். திரு. 2.1:1

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வைணவ_உரைவளம்.pdf/52&oldid=921346" இலிருந்து மீள்விக்கப்பட்டது