பக்கம்:வைணவ உரைவளம்.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24 வைணவ உரைவளம் னுடைய பரமபதத்தில் செல்லும் படியாகத் தனியே ஒப்பற்ற தேரைக் கடவிக் கைதப்பிப் போன வைதிகன் பிள்ளைகள் நால்வரையும் தாயோடு கூட்டின அப்பனே! செங்கீரை ஆடுக' என்கின்றார். இதில் குறித்த இதிகாசம் : ஒரு வைதிக அந்தணனுக்கு நான்கு குமாரர்கள். முதல் பிள்ளை பிறந்து பூமியைத் தொட்டதும் காணப்பெறவில்லை. இரண்டாவது, மூன்றாவது பிள்ளைகள் நிலைமையும் அப்படியே. பெற்றவளும் கூட முகத்தில் விழிக்கப்பெறாதபடி இன்ன விடத்தில் போயிற்றென்று தெரியாமல் காணவொண் ணாது மூன்று பிள்ளைகளும் போய்விடுகையாலே நான்காம் பிள்ளையைக் கருவுயிர்க்கப் போகும் சமயத்தில் அந்த அந்தணன் கண்ணபிரானிடம் வந்து இந்த ஒரு பிள்ளை யையாயினும் பாதுகாத்துத் தந்தருள வேண்டும்' என்று வேண்டினான். அதற்குக் கண்ணபிரான் அப்படியே செய்வ தாக வாக்குத் தந்தான். ஆனால், அன்று ஒரு வேள்வியில் தீட்சிதனாக இருக்க வேண்டியிருந்ததால் கருவுயிர்க்கும் இடத்திற்கு எழுந்தருள முடியாத நிலையில் இருந்தான். அருகிலிருந்த பார்த்தன் நான் போய் இரட்சிக்கிறேன்" என்று வாக்குத் தந்து அந்தணனையும் கூட்டிக் கொண்டு போய்க் கருவுயிர்க்கும் இல்லத்தைச் சுற்றிக் காற்றுகூட நுழையவொண்ணாதவாறு "சரக்கூடம்" அமைத்துக் காத்துக் கொண்டு நின்றான். அன்று பிறந்த பிள்ளையும் வழக்கப்படி மாயமாய் மறைந்தது. அதனால் மிக்க சோக மடைந்த அந்தணன் அருச்சுனனை மறித்து அதமனே, உன்னாலேயன்றோ என் பிள்ளை போம்படி ஆயிற்று; கண்ணன் எழுந்தருளிக் காப்பதை நீயன்றோ தடுத்தாய்?" என்று நிந்தித்து அவனைக் கண்ணபிரானருகே இழுத்துக் கொண்டு வந்தான். கண்ணன் அதுகண்டு முறுவலித்து அவனை விடு, உனக்குப் பிள்ளையை நான் கொண்டு வந்து தருகின்றேன்' என்று அருளிச் செய்து, அந்தணனையும் தன்னுடன் கொண்டு தேரிலேறி, அருச்சுனனைச் செலுத்தச்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வைணவ_உரைவளம்.pdf/51&oldid=921335" இலிருந்து மீள்விக்கப்பட்டது