பக்கம்:வைணவ உரைவளம்.pdf/525

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

502 வைணவ உரைவளம் எம்பெருமானோடு உள்ள தொடர்பினைக் கண்ட ஆழ்வார் அவனது சீலத்தில் ஈடுபட்டுக் கூறுதலாகிய திருவாய்மொழியில் ஒரு பாசுரம். இதில் ஆழ்லார், :மனமே! வல்வினையேனாகிய யான் உன்னை இரந்து உறுதியாகச் சொல்லுகின்றேன்; இதனை நழுவ விடாதே காண்1 புனத்திலே பொருந்தியிருக்கின்ற அழகிய குளிர்ந்த திருத்துழாய் மாலையைத் தரித்த ஒப்பு ஒரு சிறிதும் இல்லாதவனை அடைவோம் என்னும் இதனை நழுவ விடாதே காண்!" என்கின்றார். புனம் மேவிய பூந்துழாய்... அடைவதுமே : பரம போக்கிய னான அவனை ஆச்சயித்திருக்கை என்னும் இவ்வர்த்தமே. தன் நிலத்திலே வளர்ந்து அழகிதான திருத்துழாய் மாலையணிந்து தோளினை மேலும் நன்மார் பின் மேலும் சுடர்முடி மேலும், தாளிணை மேலும் புனைந்த தண்ணந் துழாயுடை அம்மான்' என்று வாய் நிறையப் பேசும்படி யான யோக்யதை வாய்ந்த சர்வாதிகனை விட்டுப் பிரியா மையாகிற இவ் வர்த்தத்தையே திடமாகச் சொன்னா ராயிற்று. இடைப் பிரவரலாக ஓர் ஐதிகம் : ஒரு திருமுளைத் திருநாளில்' இப் பாசுரத்தை அருளிச் செய்து முன்னாள் *' 6" а штft சக்கரத்துக்குப் புறப்பட்டருளினபடி0 திருவுள்ளத்தில் கிடக்க, புனம் மேவிய தண்துழாய் அலங்கல் இனம் ஏதும் இலான் ஆகையாவது நேற்றுப் புறப்பட்டபடி அன்றோ?' என்று அருளிச் செய்தார்." 17. திருவாய். 1.9:7 18. திருமுளைத் திருநாள்-பிரம்மோற்சவம். 19. கையார் சக்கரம்-ஆழ்வார் திருநாள் 20. புறப்பட்டருளினபடி-சேனை முதலியார் புறப் பட்டருளினபடி. சேனை முதலியார் புறப்பாட் டைப் பெருமாள் புறப்பாடாகத் திருவுள்ளம் பற்றினார் என்றபடி. 21. அருளிச் செய்தார் என்றது நஞ்சீயரை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வைணவ_உரைவளம்.pdf/525&oldid=921352" இலிருந்து மீள்விக்கப்பட்டது