பக்கம்:வைணவ உரைவளம்.pdf/527

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

504 வைணவ உரைவளம் இறைவனுடைய திருவருள் அடியார்களிடத்தில் மிக்கிருக்கும் என்பதற்கு ஐதிகம் காட்டுவார்; பிள்ளை அகளங்க பிரமராயர், பட்டரைச் சமாதானம் செய்ய வேண்டும் என்று, பட்டர் திருவுள்ளத்திற்கு உகந்த இருகை மதவாரணம் என்கின்றவனைப் பட்டர் பக்கல் வரவிட அவனும் வந்து சில வார்த்தைகளை விண்ணப்பம் செய்து, திருவுள்ளமும் மகிழ்ச்சியை யுடையதாய் இருக்கிற அளவிலே இவனுடைய வைணவத்துவம் இருக்கும்படி திருவுள்ளம் பற்றியிருக்கை உண்டே' என்றானாக, :சொல்ல வேண்டுமோ, கர்ப்பதாசர்கள்?! அன்றோ" என்றது தொடக்கமாக, இப்பாசுரத்தை அருளிச் செய்தார் பட்டர். 236 அறுக்கும் வினை" (அவதாரிகை) மகள் பாசுரம். தூதர் மீளும் அளவும் தனிமை பெறாத தலைவி தலைவன் நகரான திருநாவாய் செல்ல நினைத் தலைக் கூறும் திருவாய் மொழி. திருவடி சென்று பிராட்டியைத் திருவடி தொழுது மீண்ட பின்னர் பெருமாளை அடைவதற்கு முன்பு பிராட்டிக்குப் பிறந்த எண்ணங்கள் போலே, முன் திருவாய் மொழியில் விட்ட தூதுவர்கள் (9.7) அங்கே சென்று அவனைக் கொண்டு வருவதற்கு முன்னே நடுவில் இவர்க்குப் பிறந்த எண்ணங்களைச் சொல்லுகின்றது. அதாவது காலாளும் நெஞ்சழிவும் கண் சுழலும் 2 என்ன வேண்டும் என்ற நிலையிலிருக்கும் இவர் எங்ங்னே திருநாவாய்க்குச் 23. இருகை மதவாரணம்' என்பவன், நம்பெருமா ளிடத்தில் பரமபக்தி வாய்ந்த ஒரு கைக் கோளன்; பரம வைணவன். 24. கர்ப்பதாசர்கள்-கருவிலே திருவுடையவர்கள். 25. திருவாய். 9.8 26. பெரி. திருவந், 34

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வைணவ_உரைவளம்.pdf/527&oldid=921354" இலிருந்து மீள்விக்கப்பட்டது