பக்கம்:வைணவ உரைவளம்.pdf/528

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவாய்மொழி 505 செல்வர்? இருந்த விடத்தேயிருந்து குறுக்கும் வகை உண்டு கொலோ? (1), அணுகப்பெறும் நாள் எவை கொலோ?" (2), நான் அறியேனே' (3), கண்ணாரக் களிக்கின்றது இங்கு என்று கொல்: (5), என்பன போன்றவைகளை மனோரதிக்கின்றார் என்பதைக் கூறுவது இத்திருவாய் மொழி. உபாயமும் உபயேமும் என்னும் இரண்டும் ஈசுவரனே என்று அறுதியிட்டார்க்கு பிராப்பியத்திலே ருசி கண்ணழி வற்றால் காலதாமதத்திற்குக் காரணம் இல்லாமையாலே பேறு சித்திக்கும் அளவும் எண்ணம் செல்லுமன்றோ? இந்த எண்ணம்தான் இந்த ஆழ்வாருக்குத் தவிராததுமாய், அது தான் இனியதுமாய், இவருடைய சொரூபத்தோடு சேர்ந் திருப்பதுமானது ஒன்றே அன்றோ? இதிலுள்ள ஐதிகம். பெரிய முதலியார்2 பேற்றினைப் பெறுவதில் உள்ள விரைவாலே எப்போதும் இத்திருவாய்மொழியினைச் சொல்லிக் கொண்டேயிருப்பர். ஆகையாலே, இத்திருவாய் மொழி பெரிய முதலிபார் திருவாய்மொழி என்று வழங்கப் படுகின்றது. 237 அறுக்கும் வினையாயின ஆகத்து அவனை கிறுத்தும் மனத்து ஒன்றிய சிந்தையினார்க்கு; வெறித்தண் மலர்ச்சோலைகள் சூழ்திரு நாவாய் குறுக்கும் வகையுண்டு கொலோ கொடி யேற்கே.28 TBT6, முதலியார்-ஆளவந்தார், 28. திருவாய். 9.8;l

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வைணவ_உரைவளம்.pdf/528&oldid=921355" இலிருந்து மீள்விக்கப்பட்டது