பக்கம்:வைணவ உரைவளம்.pdf/539

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5 16 வைணவ உரை வளிம் திண்ணம்நாம் அறியச் சொன்னோம் செறிபொழில் அனந்த புரத்து அண்ணலார் கமல பாதம் அணுகுவார் அமர ராவார்.2 |புண்ணியம-பக்தி; நல்ல-மணப் பொருள்கள் கலவாத எண்ணுமின்-சிந்தனை செய்மின்: பிறப்பு-சம்சாரம்; அறுக்கும்-தொலைத் தருள்வன்; அப்பால்-மேலும், கமலம்தாமரை: அமரர் -நித்தியசூரிகள்; திண்ணம். திடமாக.) இஃது அனந்தபுரத்தின்மீதுள்ள திருவாய்மொழியின் ஒரு பாசுரம். இதில், ஆழ்வார், பக்தியோடு தண்ணிரை யும் மலர்களையும் கொண்டு அருச்சித்து எம்பெருமா னுடைய திருநாமத்தை நினைமின்; அதனால் இப் பிறப்பு நீங்கும்; அதற்குமேல் செறிந்த சோலைகள் சூழ்ந்த திருவனந்தபுரத்தில் எழுந்தருளியிருக்கின்ற பெரியோ னுடைய திருவடித் தாமரைகளைச் சேர்க்கின்றவர்கள் நித்தியசூரிகள் ஆவார்கள்; எல்லோர்கள் அறியும்படியாக நாம் அறுதியிட்டுச் சொன்னோம்' என்கின்றார். எந்தை நாமம் : இதினுள்ள ஐதிகம். இடறினவன் "அம்மே!’ என்னுமாறுபோல திருநாமம் சொல்லுவதற்கு ஒரு தகுதியைத் தேடிக்கொள்ள வேண்டா. கஞ்சீயர் திரு நாமம் சொல்லும்போது பக்தியுடையனாய்க் கொண்டு சொல்ல வேண்டுமோ என்று பட்டரைக் கேட்க, "கங்கை யிலே முழுகப்போமவனுக்கு வேறு ஒர் உவர்க்குழியிலே முழுகிப் போகவேண்டுமோ? மேல் உண்டான நன்மையைத் தருகிற இது தகுதியையும் தரமாட்டதோ?’ என்று அருளிச் செய்தாராம். திருநாமம் சொல்லுகைக்கு ருசியே ஆயிற்று வேண்டுவது; அவர்களே அதிகாரிகள். 12. திருவாய். 10.2:5

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வைணவ_உரைவளம்.pdf/539&oldid=921368" இலிருந்து மீள்விக்கப்பட்டது