பக்கம்:வைணவ உரைவளம்.pdf/538

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவாய்மொழி 5 : 5 இன்னோர் ஐதிகம் ஜனநாதப்பிரம்மராயர் திருமுடிக் குறையிலே மரம் வெட்டு வியா நிற்க, எம்பார் அருளிச் செய்த வார்த்தையை நினைப்பது.' இதன் விவரம்: எம்பார் பிரம்மராயரை நோக்கி, அல்லாளப் பெருமானே! ஈசுவர விபூதியை அழிக்கப் பார்த்தாயா?" என்ன, இவர் சொல்லும் வார்த்தையைக் கேட்கைக்காக, ஈசுவர விபூதி அல்லாத இடமும் உண்டோ?’ என்ன, அவைபோல் அல்ல காண் இவை; சார்வ பெளமனான ராஜாவும் தேவியுமாக முற்றுாட்டாகக் (பூர்ண அநுபவமாக்க) குட நீர்வார்த்து ஆக்கும் சோலை போலே, பெருமாளும் பெரிய பிராட்டி யாரும் கூடக் கைதொட்டு ஆக்குமவைகாண்!" என்று அருளிச் செய்தார். உகந்தருளின நிலங்களிலே மெய்யே பிரபத்தி விளைந்தார்க்கு அங்குள்ளவை எல்லாம் உத்தேஷ்யமாகத் தோன்றுமன்றோ? பிறிதோர் ஐதிகம் :ஆச்சான் திருவாலிகாடுதாசர் சுரவன் பாக்குகள் (உயர்ந்த பாக்குகள்) நல்லன சிலவற்றைப் பட்டருக்குக் கொடுவந்து கொடுக்க அவற்றைக்கண்டு, "இவை இருந்தபடி என்? திருவருள் கமுகின்றும் வந்த வையோ?" என்று அருளிச் செய்தாராம். நீராலே வளர்ந்தவை அன்றே, அவனுடைய திருவருட்பார்வை யாலே வளர்ந்தவை அன்றோ? (திருவாய் 8, 9, 5 ஈட்டுரை யையும் காண்க) 243 புண்ணியம் செய்து நல்ல புனலொடு மலாகள் தூவி எண்ணுமின் எங்தை நாமம் இப்பிறப் பறுக்கு மப்பால் 10. திருமுடிக்குறை- பெருமாளுடைய திருமுடிப் பிரதேசமான உபயகாவேரியின் மத்தியப் பிரதேசம். 1 . 33. காண்க

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வைணவ_உரைவளம்.pdf/538&oldid=921367" இலிருந்து மீள்விக்கப்பட்டது