பக்கம்:வைணவ உரைவளம்.pdf/552

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவாய்மொழி 529 போவதற்குக் காரணமாக இருந்த பெரும்பாதிகன். ஆதலால் அவன் பெயரைச் சொல்லுதற்கும் வாய்வர்irtoல் *அவ்யபதேச்யன்' என்கின்றார். அவத்தப்புன் சமயச்சொல் பொய்யை மெய்என்று அணிமிடறு புழுத்தான்தன் அவையின் மேவி சிவத்துக்கு மேல்பதக்கு உண்டென்று தீட்டும் திரிக்கூர வேதியர்கோன் செவ்வி பாடப் பவத்துக்கம் பிணிநீங்க நரகம் தூரப் பரமபதம் குடிமலியப் பள்ளி கொள்ளும் கவத்துப்புச் செங்கனிவாய்க் கரிய மேனி! கம்பெருமாள் அரங்கே சர் ஆடீர் ஊசல் 28 என்கின்றார் திவ்விய கவியும். கிருமிகண்டனுக்குப் பின் பட்டத்திற்கு வந்தவன் அவன் மகன் விக்கிரம சோழன். இவன் காலம் கி. பி. 1116. 1134. தமப்பன் செய்தது திருக்கண்ணபுரத்தின் திருமதில் களை இடித்துத் தள்ளியது. இது வைணவ தர்சனத்திற்குச் செய்த விரோதமான செயல். தமப்பன் பெருமாள் கோ யிலை இடித்துப் போட்டானென்று கேள்வியுற்று, ஐயோ! ஒருகோயிலை இடித்துப் போட்டதனால் என்னாகும்? இதனால் தரிசனம் குலைந்த தாமோ? திருவாய்மொழியும் பூர் ராமாயணமும் ஆகிய இரண்டு பிரபந்தகளன்றோ வைணவ தரிசனத்திற்குக் கல் மதில்களாக இருப்பவை? அவற்றை அசைக்க முடியுமோ ஒருவர்க்கு? என்றானாம் கிருமி கண்ட சோழனின் மகன். இதனால் திருவாய்மொழி யான அசுரப் பிரகிருதிகள் மண்ணுண்ணும் படியtகவும் தேவப் பிரகிருதிகள் வாழ்ந்து போம்படியாகவும் அவ தரித்தது என்னுமிடம் ஒரு சிறுவன் வாயினாலும் வெளி வந்தது என்று காட்டப் பெற்றது. 29. சீரங்க நாயகர் ஊசல் 20 வை.-34

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வைணவ_உரைவளம்.pdf/552&oldid=921383" இலிருந்து மீள்விக்கப்பட்டது