பக்கம்:வைணவ உரைவளம்.pdf/574

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

552. வைணவ உரை வளம் மணமுனி என்றும், திருக்கோட்டியூர் நம்பி எம்பெரு மானார்’ என்றும் திருமாலையாண்டான் சடபகபேன் பொன்னடி என்றும் திருமலை நம்பி கோயிலண்ணன்" என்றும், எம்பார் ரீபாஷ்யக்காரர்' என்றும், ஆதிகேசவர் "பூதபுரீசர்" என்றும், திருவேங்கட முடையான் தேசிகேந்தரர் என்றும் திருநாமங்கள் சாத்தினர். இவர்தாம் வைணவ சித்தாந்தத்தை முறைப்படுத்தி உலகுக் களித்தார். எண்ணற்ற சீடர்களைக் கொண்டவர். இவர்கட்கெல் லாம் உபதேசித்துக் கொண்டு கோயிலில் 125 ஆண்டுகள் எழுந்தருளியிருந்தார். இவர் அருளிச் செய்த நூல்கள் "பூரிபாஷியம்’, ‘வேதாந்த சாரம்', வேதாந்த தீபம் வேதாந்த சங்கிரகம்" உடையவர் நித்தியம் கீதா பாஷியம்'முதலியன. வைணவத்தின் வளர்ப்புத்தாயாகத்’ திதழ்ந்த பெருமகனார். இவர் (பாசுரம் 8, 45, 81, 138, 148, 182, 192, 217, 226, 231, 251 காண்க). கரிகால் சோழபிரம்மராயன்: இவன் கலப் பிரதேசத்தி லுள்ள ஒரு பிரபு. நஞ்சீயர் காலத்தவன். இவன் திருவாய் மொழிக்கு ஒரு வியாக்கியானம் எழுதி அதை நஞ்சீயரிடம் காட்டி, மதிப்புரை வாங்கப் பார்த்தான். அதைச் சீயர் நம்பிள்ளையிடம் தந்து அவரை மதிப்புரை தருமாறு பணித்தார். மேல் விவரம் பாசுரம்-152 நோக்கி அறிக. கிடாம்பி ஆச்சான் : இவர் பெரிய திருமலை நம்பிக்கும் மருமகன். இவர் திருக்குமாரர் இராமாநுசப் பிள்ளான்" இவர் திருக்கோட்டியூர் நம்பி நியமனத்தால் உடைய வருக்கு மடப்பள்ளி சைங்கரியம் செய்தவர். சாத்திரங் களையும் சம்பிரதாயங்களையும் பழுதற ஓதி உணர்ந்தவர். இவரை மடைப்பள்ளி ஆச்சான்' என்றும் வழங்குவதுண்டு. பூரீபாஷ்யக்காரருடைய திருமடைப் பள்ளியில் அந்தரங்க கைங்கரியம் செய்து வந்து அவரிடமே எல்லாப் பொருள் களையும் கற்றறிந்த கிடாம்பி ஆச்சான் வழியாக வைணவ சம்பிரதாயம் தழைத் தோங்குவதால் மடைப் பள்ளி வந்த மணம்’ என்று சிறப்பித்தார் வேதாந்த

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வைணவ_உரைவளம்.pdf/574&oldid=921407" இலிருந்து மீள்விக்கப்பட்டது