பக்கம்:வைணவ உரைவளம்.pdf/575

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பின்னிணைப்பு-2 553 தேசிகர் (தே. பி. 133). இவர் எழுபத்து நான்கு சிம்மா சனாதிபதிகளுள் ஒருவர் (பாசுரம்-166 காண்க). குருகைக் காவலப்பன் : நாதமுனிகளின் சீடர். நாத முனிகளின் சொற்படி ஆளவந்தாருக்கு யோக இரகசியங் களை உபதேசிக்க இருந்தவர் (பாசுரம்-132 காண்க). குன்றத்து சீயர் : இவர் எம்பெருமானார் பூரீபாதத் தில் ஒர் அயனத்தில் புகுந்தார். இவருடைய இயற் பெயர் "சிங்கப்பிரான்" என்பது,அயனத்தின் உட்பொருளை பாசுரம் -111 இல் காண்க. கூரத்தாழ்வான் : இவர் பிறப்பிடம் காஞ்சிபுரத் தருகிலுள்ள கூரம் என்ற சிற்றுார். உடையவரின் சீடர். உஞ்ச விருத்தி செய்து வாழ்ந்தவர். ஒரு நாள் உஞ்சவிருத்திக்குச் செல்லாமலிருக்க கோயிலில் பெருமாள், அமுது கொள்ளத் திருச்சின்னம் பரிமாறினார். பிராட்டி பெருமாளை நோக்கி ஆழ்வான் பட்டினி, யிருக்க, தேவரீர் அமுது கொள்ளலாமோ?" எனப், பெருமாளால் அமுது தரப்பெற்றவர். உடையவருக்கு எல்லாவிதத்திலும் உதவினவர். 'வஞ்ச முக்குறும்பாம் குழியைக் கடக்கும் கூரத்தாழ்வான்’ (இராமாதுச நூற். 7) என்று அமுதனா ரால் போற்றப்பெற்றவர். இவர் சோழனால் கண்ணி ழந்து திருவரங்கத்திலிருந்து பெருமாளைப் பிரார்த்தித்து உடையவர் பூரீபாதநீர்த்தம் பெற்று திருநாட்டுக்கு எழுந்தளினார். இவர் கூரேசர், கூராதிபர், கூராதிபதி, கூரநாதர், பூரீவத்ஸ்சிஹனர் என்ற திருநாமங்களாலும் வழங்கப்பெறுவார். இவர் வரதராஜ ஸ்தவம்’ சுந்தர பாஹாச்ஸ்தவம்’ அதிமானுஷியஸ்தவம்’ *றுரீவை குண்டஸ்தவம்’, யமகரத்நாகரம்" கத்தியத் திரய வியாக்கியானம்' முதலிய நூல்களைச் செய்தவர். பிள்ளைப் பிள்ளையாழ்வான், திருவரங்கத்தமுதனார். நாலூரான் என்பவர்கள் இவருடைய சீடர்கள். சிஷ்ய

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வைணவ_உரைவளம்.pdf/575&oldid=921408" இலிருந்து மீள்விக்கப்பட்டது