பக்கம்:வைணவ உரைவளம்.pdf/582

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

560 வைணவ உரை வளம் பிள்ளை அழகிய மணவாளரையர் : திருவரங்கத்தில் வாழ்ந்து வந்த அரையர்களுள் ஒருவர். (பாசுரம்-73 காண்க). பிள்ளை அழகிய மணவாளப் பெருமாளரையர் : நஞ்சீயர் காலத்து அரையர், திருவரங்கத்தில் வாழ்ந்தவர். வரை மீகானில் தடம்பருகு கருமுகிலை (பெரி. திரு.2.3,3) என்ப தற்கு பட்டர் உரைத்த நயப்பொருளை நஞ்சீயருக்கு எடுத்துக் காட்டியவர். (பாசுரம்-34 காண்க. மேலும் பாசுரம்-202, 231, 248 காண்க). பிள்ளை திருநறையூர் அரையர் : கீழை நாட்டில் கோயி லுக்கு முக்காத வழி தொலைவில் உள்ள தொட்டியம்திரு நாராயணபுரத்திலே பெருமாளைச் சேவிக்கக் குடும்பத் துடன் எழுந்தருளின சமயத்தில் சில பகவத் விரோதிகள் சந்நிதியில் நெருப்பை வைத்தனர். இதனைக் கண்ணுற்ற அரையர் அவ்வெம்பெருமான் திருமேனிக்குண்டான ஆபத் தைக் கண்டு தாமும் பிள்ளைகளுடன் அத் திவ்விய மங்கள விக்கிரகத்தைக் கட்டிக்கொண்டு திருமேனியை விட்ட உபேய அதிகாரி. எழுபத்து நான்கு சிம்மாசனாதிபதிகளுள் ஒருவர் (பாசுரம்-18, 66, 106, 135, 167, 193, 203, 228, 242 காண்க). பிள்ளை தேவப்பெருமாள் அரையர் : ஆழ்வார் திரு. வரங்கப் பெருமாளரையரின் திருக்குமாரர். இவரும் பாசுரங்களை உருக்கமாகச் சேவிப்பார். (பாசுரம்-230 காண்க). பிள்ளையமுதனார் : பட்டர் காலத்து வைணவர். பட்டர் பாசுரங்கட்குப் பொருள் கூறுவதை விரும்பிக் கேட்டு மகிழ்பவர் (பாசுரம்-69, 246 காண்க). பிள்ளை பிள்ளை; பிள்ளை பிள்ளையாழ்வான் என்றும் வழங்கப்பெறுபவர். அனந்தாழ்வான் திருவடி சம்பந்தி. கூரத்தாழ்வானின் சீடர். எழுபத்து நான்கு சிம்மாசனாதி.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வைணவ_உரைவளம்.pdf/582&oldid=921416" இலிருந்து மீள்விக்கப்பட்டது