பக்கம்:வைணவ உரைவளம்.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

48 வைணவ உரைவளம் கின்றார். கண் வளர்ந்தருள்கின்ற காரணத்தை எழுந் திருந்த பேசுமாறு வேண்டுகின்றார். இந்தச் சயனத் திருக்கோலத்தைக் குலைத்து அடுத்தக் கணத்திலே தாமும் அநுதாபப்படும்படி நேர்ந்து விடுமோ என்று அஞ்சிய ஆழ்வார் வாழி' என்று அந்தச் சயனத் திருக்கோலத்துக்கே உகந்து மங்காளாசாசனம் செய்தருள் கின்றார்; ஒரு தீங்கும் இல்லாமல் கண்வளர்ந்தருள்கின்ற இவ்வழகு நித்தியமாய்ச் செல்ல வேண்டுமென்கின்றார். ஐதிகம் : திருமழிசைப்பிரான் ஆரா அமுதாழ்வாரை நோக்கி கிடந்தவாறு எழுந்திருந்து பேசு' என்று பிரார்த் திக்க, பெருமாளும் பக்தர்களின் அடிமையாதலாலே அப்படியே எழுந்திருக்கப் புக, அது கண்ட ஆழ்வார் அர்ச்சாவதார சமாதி குலைய வொண்ணாதென்று ஒருவுள்ளம்பற்றி வாழி வாழி என்று மங்களாசாசன முகத்தால் அப்படியே கிடந்தருளும்படியை விரும்ப, ஆராவமுதாழ்வாரும் அவ்வண்ணமே தம்முடைய எழுச்சி முயற்சியை நிறித்திக் கொண்டாரென்றும் இப்போதைய அர்ச்சாவதார நிலைமையில் இவ்வம்சம் விளங்குமாறு உத்தாந சாயியாக சேவை சாதிப்பதும் இதுபற்றியே. என்றும் பெரியோர் ஐதிகம கூறுவதுண்டு. திருமாலை 12 வேதநூல் பிராயம் நூறு மணிசர்தாம் புகுவ ரேலும் பாதியும் உறங்கிப் போகும் கின்றதில் பதினை யாண்டு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வைணவ_உரைவளம்.pdf/75&oldid=921449" இலிருந்து மீள்விக்கப்பட்டது