பக்கம்:வைணவ உரைவளம்.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

52 வைணவ உரைவளம் அந்தத் திருநாமம் என்ன” என்று விரும்பிக் கேட்டால் அப்போதைக்கு உபதேசிப்போம் என்றாம். மூன்றெழுத்த தனை மூன்றெழுத்ததனால் 22 என்று பெரியாழ்வார் மறைத்தாற் போல. கத்திர பந்து : பிராமணர்களுள் அதமனைப் பிரஹ்ம பந்து' என்கிறாப்போலே கூடித்திரியர்களுள் அதமனை கடித்திர பந்து' என்கிறது. நம் முதலிகள் கோஷ்டியில், 'நாலூரான்' என்றாற் போலே ரிஷிகள் கோஷ்டியில் கடித்திர பந்து' என்றால் செவி புதைக்கும்படியாய்த்து இருப்பது' என்பர் பெரியவாச்சான் பிள்ளை. இவன் வரலாறு23 : கத்திர பந்து கொடிய நடத்தை களையுடையவன; பல்வகைப் பாவங்களே உருவெடுத்தாற் போன்றவன். இவன் தாய் தந்தையர், மக்கள், உறவினர், நண்பர்கள் ஆகிய அனைவராலும் கைவிடப் பெற்றுக் காட்டில் திரிந்து உயிர்க் கொலை புரிந்து வயிறு வளர்த்துக் காலம் கழித்து வந்தான். இங்ங்ணம் நெடுங்காலம் சென்றது. ஒருநாள் மாமுனிவர் ஒருவர் கொடிய நண் பகலில் வெப்பம் தாங்க மாட்டாமல் வழி தப்பிப் போகா நின்றவர் இப்பாவி திரியும் கானகத்தில் புகுந்து இவன் கண்ணுக்கு இலக்காயினர். அவருடைய பரிதாப நிலை யைக் கண்ட இவனுக்குத் தன்னையும் அறியாமல் அவர் பால் இரக்கம் உண்டாயிற்று. அவரிடம் வழி தப்பிப் போவதைச் சுட்டிக் காட்டினான். அவரும் அதனை உணர்வாராயினர். பொறுக்க முடியாத தாக விடாயுடன் அவர் ஒரு தடாகத்தை நாடிச் செல்கையில் அருகே ஓர் அழகிய பொய்கையைக் கண்ணுற்றார். தாப மிகுதியால் தவறி அக்குளத்தில் விழுந்திட்டார். அப்போது அருகி 22. பெரியாழ். திரு. 4.7:10 23. விஷ்னு தர்மத்தில் 97-வது அத்தியாயத்தில் இவனைப் பற்றிய வரலாறு விரிவாகக் கூறப் பெற்றுள்ளது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வைணவ_உரைவளம்.pdf/79&oldid=921453" இலிருந்து மீள்விக்கப்பட்டது