பக்கம்:வைணவ உரைவளம்.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முதலாயிரம் 69 சினங் கொண்ட இரணியன் பிரகலாதனைத் தன் வழியில் இணக்குவதற்குப் பலவாறு முயன்றும் தன் வழிக்கு வராத அவனைக் கொல்லுவதற்குப் பலவாறு முயன்றும் அவன் திருமால் அருளால் இறவா தொழிய, ஒருநாள் மாலை நேரத்தில் அடா! நீ சொல்லும் நாராயணன் என்பான் எங்கு உளன்? காட்டு என்ன, அப்பாலகன், துரணிலும் உளன், துரும்பிலும் உளன், எங்கும் உளன்' என்று உறுதி யாய்ச் சொல்ல, உடனே இரணியன் இங்கு உளனோ?" என்று சொல்லி எதிரில் நின்ற ஒரு தூணைப் புடைக்க, அதிலிருந்து திருமால் உடனே மனித உருவமும் சிங்க உருவ மும் கலந்த நரசிம்ம மூர்த்தியாய்த் தோன்றி இரணியனைப் பிடித்து வாயிற்படியில் தன் மடிமீது வைத்துக் கொண்டு தனது திருக்கை நகங்களால் அவன் மார்பைப் பிளந்து அழித்திட்டுப் பிரகலாதனுக்கு அருள் செய்தான் என்ப தா.ம. திருமங்கையாழ்வார் இந்த அவதாரத்தில், பள்ளியில் ஓதி வந்ததன் சிறுவன் வாயில்ஓர் ஆயிரம் காமம் ஒள்ளிய ஆகிப் போத,ஆங் கதனுக்கு ஒன்றும்ஒர் பொறுப்பிலன் ஆகிப் பிள்ளையைச் சீறி வெகுண்டுதுண் புடைப்ப பிறைஎயிற்று அனல்விழிப் பேழ்வாய் தெள்ளிய சிங்கம் ஆகிய தேவை' எனறு ஆழங்கால் பட்டதை நாம் அநுபவிக்கின்றோம். 86. இரணியன் இவ்வாறு கேட்டதும் எம்பெருமாள் அணுக்கள் தோறும் நரசிங்க வடிவாய் எழுத்தருளி யிருக்க, இதனால் சிறிது நோம் அகில முழுவதும் நாசிங்க கர்ப்பமாய் வரதனைப் பட்டதாக ஒரு வட மொழிக் கவிஞர் கற்பனை செய்கின்றார். -37. பெரி. திரு. 2.3:8

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வைணவ_உரைவளம்.pdf/96&oldid=921472" இலிருந்து மீள்விக்கப்பட்டது