60 வைணவ உரைவளம் கரிய வாகிப் புடைபடர்ந்து மிளிர்ந்து செவ்வரி யோடி, நீண்ட,அப் பெரிய வாய கண்கள் என்னைப் பேதைமை செய்தனவே.4 [பரியனாகி-பெரிய வடிவு கொண்டு: அவுணன்இரணியன்; கீண்ட-கிழித்துப் போட்ட; அரிய-அணுக முடியாத; முகத்து-திருமுக மண்டலத்தில்; புடைபரந்து-விசாலமாகி1 எப்போதும் அழகிய மணவாளனின் திருக்கண்களின் பெருமையையே தாம் வாய்வெருவி, பலரும் இவன் பேயன்' என்று ஏசும்படியான உன்மத்த நிலையை அடைந்து விட்டதாக அருளிச் செய்கின்றார். ஏழையராவி யுண்ணும் இணைக் கூற்றங்கொலோ அறியேன், ஆழியங் கண்ணபிரான் திருக்கண்கள் கொலோ அறியேன்" என்று திருக்கண்களில் ஈடுபட்டு நம்மாழ்வார் பட்ட பாடு இவரும் படுகின்றார் போலும். அவுணன் உடல்கீண்ட வரலாறு : தனித்தனி தேவர் மனிதர் விலங்கு முதலிய பிராணிகளாலும், பகலிலும் இரவி லும் பூமியிலும், வானத்திலும் வீட்டின் அகத்திலும் புறத்தி லும் தனக்கு மரணமுண்டாகாதபடி வரம் பெற்றவன் இரணியன். இவன் தேவர் முதலியவர்கட்கும் கொடுமை கள் இயற்றித் தன்னையே அனைவரும் கடவுளாக வணங்கி வரும்படி செய்து வந்தான். இவனுடைய மகனான பிர கலாதாழ்வான் இளமை தொடங்கி திருமால் வழிபாட் டாளனாய் வளர்ந்து வந்தான். தந்தையின் கட்டளைப் படி முதலில் இரண்யாய நம: என்று சொல்லிக் கற்காமல் 'நாராயணாய நம: என்று சொல்லி வந்தான். கடுஞ் .-ങ്ങ 34. அமலனாதி-8 35. திருவாய். 7.711
பக்கம்:வைணவ உரைவளம்.pdf/95
Appearance