பக்கம்:வைணவ உரைவளம்.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முதலாயிரம் 6ፐ தும் அக்கபாலம் நிறைந்திலது; தம் கையை விட்டும் நீங்கிற்றிலது. பின்பு ஒருநாள் பதரிகாச்ரமத்தை அடைந்து அங்கு எழுந்தருளியுள்ள நாராயண மூர்த்தியை வணங்கி இரந்தபோது, அப்பெருமான் தன் மார்பினை நகத்தால் கீறி, சிறிது குருதியை அட்சயம் என்று பிச்சை யிட்டார். உடனே கபாலம் நிறைந்து அது கையை விட்டு அகன்றது என்பதாகும். இதனால் சீமன் நாராயண னுடைய பரத்துவத்தை வெளியிட்டவாறு. இந்தஇதிகாசம் பெரிய திருமொழி 6.7:9லும் வந்துளது. பெரியவாச்சான் பிள்ளை வியாக்கியானத்தில், *சந்திரனுடைய கூடியத்தைப் போக்கினான் என்றுமாம்" என்ற பொருளும் அருளிச் செய்யப்பெற்றிருப்பதால் *துண்டவெண் பிறையின்' என்றும் ஒரு பாடம் உண்டெனத் தெரிகின்றது. பின்னிரண்டடிகளில் உள்ள வரலாறு : காரணாவஸ்தை யில் எல்லாக் காரியங்களையும் தம் பக்கலில் உபசம்கரித்த பின்பு சிருஷ்டிக்குமாறு, வெற்றிப் போர் கடலரையன் விழுங்காமல் தான் விழுங்கி' என்றபடி எல்லாப் பொருள் களையும் பிரளயப் பெருங்கடலில் நின்றும் தப்ப வைத்துத் தன் திருவயிற்றிலே அடக்கி நோக்கின. பெருநன்றியையும், இப்போதும் தம்மைச் சம்சார சாகரம் விழுங்காதபடி ஆட் படுத்திக் கொண்ட உபகாராதி சயத்தையும் ஆநந்தமாகப் பேசுகின்றார். 2 பரிய னாகி வந்த அவுனன் உடல்கீண்ட, அமரர்க்கு அரிய ஆதிப்பிரான் அரங்கத் தமலன் முகத்து 88. பெரி. திரு . 11.6:3

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வைணவ_உரைவளம்.pdf/94&oldid=921470" இலிருந்து மீள்விக்கப்பட்டது