பக்கம்:வைணவ உரைவளம்.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66 வைணவ உரைவளம் அண்ட சண்டயகி ரண்டத்தொரு மாநிலம் எழுமால்வரை முற்றும் உண்ட கண்டங்கண்டீா அடியேனை உய்யக் கொண்டதே' (துண்ட-ஒரு துண்டாயிருக்கிற: வெண் பிறையன் -வெளுத்த சந்திரனை உடையவனான சிவன்; துயர்-பாதகம்; அம்சிறை-அழகிய சிறகையுடைய, பொழில்-சோலைகள்; மேய -பொருந்திய, அண்டர்-அண்டத்துக்குட் பட்ட தேவாதிவர்க்கங்களையும்; அண்டம்அண்டங்களையும்; பகிரண்டம் - அண்டா வரணங்களையும்; ஒரு மாநிலம் - ஒப்பற்ற மகாப்பிருதிவி, எழுமால்வரை - ஏழு குல பர்வதங்கள்; முற்றும் - அனைத்தையும்; உண்ட-அழுது செய்த கண்டம்-கழுத்து) எம்பெருமானின் கண்டம் தன்னை உய்வித்தது என்று கூறிப் பெருமிதம் கொள்ளுகின்றார் இதில் ஆழ்வார். துண்ட வெண்பிறையன் துயர் தீர்த்த வரலாறு : ஒரு காலத்தில் பரமசிவன் தன்னைப் போலவே பிரமனும் ஐந்து தலையுடையனாயிருப்பது பலரும் பார்த்து மயங்குவதற்கு இடமாயிருக்கிறதென்று கருதி அவனது சிரமொன்றினைக் இள்ளி எடுத்து விட்டான். பிரம்மஹத்தி தோஷமாக" அக்கபாலம் அப்படியே அவன் கையில் ஒட்டிக் கொண்டது. *இதற்கு என் செய்வது?’ என்று அவன் கவலைப்பட்டுக் கொண்டிருந்தான். தேவர்களும் முனிவர்களும் இப்பாவம் தொலையப் பிச்சை எடுக்க வேண்டும்; என்றைக்குக் கபாலம் நிறையுமோ, அன்றைக்கே இது கையை விட்டு அகலும் என்று உரைக்க, சிவபிரான் பலகாலம் பல தலங் களிலும் சென்று பிச்சை ஏற்றுக்கொண்டே வருந்தித் திரிந் 32. அமலனாதி-6

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வைணவ_உரைவளம்.pdf/93&oldid=921469" இலிருந்து மீள்விக்கப்பட்டது