பக்கம்:வையம் போற்றும் வனிதையர்.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அழகைத் துறந்த அணங்கு 5 " தளரடிமென் நகைமயிலைத் தாதவிழ்தார்க் காளைக்குக் களிமகிழ்சுற் றம்போற்றக் கல்யாணம் செய்தார்கள் என்றே குறிப்பிடுகிரு.ர். அம்மையார் மென்மைத் தன்மைக்கும் இளஞ் சாயலுக்கும் மயில் உவமை மிக மிகம் ப்ொருத்தமுடையதே. அன்னணமே தோற்றப் பொலிவுக்கும் ஏற்ற உணர்ச்சிக்கும் பரம தத்தனுக் குக் காளை உவமை சாலவும் தக்கதே. ஆனால், ஈண்டுச் சேக்கிழார் தாம் கூறிய உவமையில் இப் பொருத்தமே அன்றி, ஏனையதொரு பொருட் பொருத்தமும் செறி யப் பாடியுள்ளார் என்றே யாம் நினைக்க வேண்டி யிருக்கிறது. அருண் மொழித் தேவர்க்குப் புனிதவதி யார் வரலாற்றுப் பகுதி நன்கன்ம் தெரியும். இம் மணம் பின்னல் எங்ங்னம் இயங்கப் போகிறது என் பதையும் அவர் நன்கு அறிந்தவர். ஆதலின், இவ் வுவமையின் மூலம் பின்னர் நடக்க இருக்கும் நிகழ்ச் சியை முன்னர் நாம் அறிய அறிவுறுத்துகின்ருர் புல வர் சிகாமணியார். மயில் பறவை இனத்தைச் சார்க் தது. காளே விலங்கு ஈட்டத்தைச் சேர்ந்தது. புள் ளும் விலங்கும் பொருந்துதல் கூடுமோ ! அவை இரண் டும் பொருந்தி வாழ்தல் ஒண்னுமோ ? அவை பொருந்தி வாழ்தல் என்பது முயற்கொம்பே அன்ருே? அதுபோலவே, பரமதத்தனுக்கும் புனிதவதியார்க்கும் கடந்த கடிமணம் பொருத்தமற்றது. இவர்கள் பின் ல்ை பொருந்தி வாழும் கிலேயினைப் பெருதவர் ஆவர்,” என்பதை உவமை முகத்தால் விளக்கி வைத்தார், உலகம் புகழும் உத்தமர் சேக்கிழார் பெருமானர். பொருந்தி வாழும் இயல்பு இவர்டிால் இருப்பதைப் புலவர் அறிந்திருந்தால், பால் பொருத்தம் அமையக் காளைக்கும் இளமணநாகிற்கும் என்றேனும், பெட்ை