பக்கம்:வையம் போற்றும் வனிதையர்.pdf/124

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10. மனையை மங்கலம் ஆக்கிய மடந்தை மாதர்கள் பூங்கொடியனேயார் என்று புலவர் கள் புனைதல் உண்டு. கொடி கொழுகொம்பு இன்றிப் படராது. அதுபோல மாதராம் பூங்கொடியும் ஒரு கொழுகொம்பு பற்றியே படர்தல்வேண்டும். அவர்க் குக் கொழுகொம்பாகிக் குல விவருவோர் அவர் அவர் வேட்ட கணவன்மார் அன்றி, வேறு அல்லர். கேள்வன்மார்கள் மாதர்களாம் பூங்கொடிகள் படர் தற்குக் கொழுகொம்பு போன்றவர் என்பதைப் புலப் படுத்தவே போலும் கொழுகர் என்னும் சொல் வழக் கும் அவர்கட்கும் உளதாயிற்று. ஆகவே, பூவையர் தமக்குக் கணவன்மார்கள் பெருந்துணைவர் என்பது அறியக்கிடக்கிறது. அவர்கள் இன்றேல், வாழ்வு இல்லை; சீர் இல்லை; சிறப்பு இல்லை; கேளும் இல்லை; கிளேயும் இல்லை. அவை ஒருகால் இருப்பினும் உப சாரம் ஆகுமே அன்றி உண்மையாகா. இதல்ைதான் ' கொண்டானில் துன்னிய கேளிர் பிறர் இல்லை.” என்றும் கணவனே இழந்தோர்க்கு காட்டுவதில் ' என்றும் தமிழ் நூல்கள் கழறுகின்றன. இது கரு தியே தலையன்புடைய சில பெண்ணணங்குகள் கண வன் இறந்ததும் உடன்கட்டை ஏறும் வழக்கமும் கொண்டனர். உடன் கட்டை ஏற வந்துகின்ற கோமகளைத் தடுத்த பெரியவர்களைத் தெழித்தும் உரைத்துள்ளார் நம் நாட்டுக் கற்புடைய காரிகையர்.