பக்கம்:வையம் போற்றும் வனிதையர்.pdf/127

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

122 மனையை மங்கலம் ஆக்கிய மடங்தை கலிக்காமர்க்குக் கடுஞ்சினம் எழுகிறது. ஆல்ை, கடுஞ்சொல் எழுந்திலது. இன்னது செய்வேன் என்று இம்ப எண்ணுகிருர். ஆல்ை, மனத்துக்கண்மா சிலர் ஆதலின், சுடுசொல் கூற உள்ளம் கூசுகிறது. இதுவன்ருே சான்ருேர் இயல்பு. சீற்றத்தினும் செம்மை காணும் சீரியர் அன்ருே அன்னர். இந்நிலையில் இறைவனர் இவ்விருவரையும் ஒன்று சேர்க்க உளம்கொண்டார். எல்லாம் வல்ல இறைவர் ஆதலின், ஏயர் கோனர் தமக்கு வாடுறு சூலைநோய் வந்து அணுகவே எண்ணங்கொண்டார். அடியரை ஆட்கொள்ளும் முறையில் அங்கணர் மேற் கொள்ளும் முறைக்கு ஓர் அளவு இல்லை. ஒருவற்கு ஞான அமுது உதவுவர். அவரே ஒருவர்க்கு நாட்டிற் கிலாத குடர் நோய் நல்குவர். அஃது அவர் செய்யும் ஆடல் ஆகும். இதல்ை அன்ருே, அவனே அலகிலா விளையாட்டுடையான் என்று அறிஞர் அறிந்து கூறி ᎧöᎢfᎢ . கலிக்காமரைச் சூலைநோய் அண்மியது. குலே மிகக் கொடிய நொய். அந்நோய் வடஅனலும், கொடு விடமும், வச்சிரமும் போல வாதனையைச் செய வல்லது. அது கொடிய எலாம் ஒன்ருகும் கொடுமை யைக் கொண்டது. இங்கோயின் கொடுமையை யார் கூற இயலும் ? இதனைத் துய்த்த பொறுமையாளர் அன்ருே கூற இயலும் இது தம்மை வாட்டிய விதத்தை அப்பர் பெருமானர் அகம் உருகித், " தோற்ருதிென் வயிற்றின் அகம்படியே குடரோடு தொடக்கி முடக்கி இட ஆற்றேன் ' என்றும், கஞ்சாகி வந்தென்னே கலிவது ' என்றும்,