பக்கம்:வையம் போற்றும் வனிதையர்.pdf/126

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மனேயை மங்கலம் ஆக்கிய மடங்தை 121 போலவும் பல்மீன் நடுவண் பால் மதி போலவும் கலிக் காமர் என்னும் கண்ணியர் தோன்றினர். கலிக்காமர் அரனர் அடியை மறவா அன்பினர். இவர் வாழ் பதிக்கு அண்மையதான திருப்புன்கூர் திருப் பதியில் தீராக் காதல் உடையவர். அதற்கு ஆய திருப்பணி பலவும் ஆற்றும் விருப்புமிக்க விற லுடையவர். இவர்க்கு வாய்த்த மனேவியாரோ, பதி சொல் தவருப் பான்மையராய்க் கற்புக் கடம் பூண்ட காரிகையராய் இலங்கினர். ஆகவே, இக் காதல் மனை வியாரும் காதலரும் மாறின்றித் தீதில் கருமங்கள் தாம் இயற்றி இனிதுறைந்து வருவாராயினர். நீறு கந்தார் கழல்களையே துணை எனப் பேணிவந்தார்கள். இது கிற்க. வன்தொண்டப் பெருந்தகையார்க்கும் பரவை என்னும் பாவையர்க்கும் ஊடல் சிறிது உளதா யிற்று. (ஊடற்குக் காரணம் கம்பிக்கேற்ற கங்கை மார் என்னும் தலைப்பின்கீழ் விவரிக்கப்பட்டுள்ளது. விரிவினை ஆண்டுக் காண்க.) அதனைத் தீர்க்கப் பரவை கணவனர் பரமன்தனேயே தூதுபோக்கிப் பரவை பிணக்கைத் தீர்த்துக்கொண்டார். இதனைக் கேட்ட னர் கலிக்காமர். வேதம் காணு விமலனர் பாதம் கோவத் துாது செலவிடுத்தது பாவம் என்று கொண்டு தம்பிரான் தோழரை அகத்தும் புறத்தும் அறவே வெறுத்திட்டார். வெம்பினர். அதிசயித்தார். வெரு வினர் எம்பிரான் இசைந்தாரேனும் ஏவப் பெறு வதோ ? இதனை எண்ணி உள்ளம் கம்பியாதவனே யான் என் முன் காணும் நாள் எங்காள்?' என்று நாளை எதிர்நோக்கி நின்ருர். வர எதிர் காண்பேனுகில் வருவது என்னங்.கொல்?' என்று கருவினர்.