பக்கம்:வையம் போற்றும் வனிதையர்.pdf/141

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கம்பிக் குகந்த், கங்கைமார் சுந்தரர் பரவையாரைப் பார்த்துப் பாராட்டிய தற்கேற்பப் பரவையார் உள்ளமும் ஆரூரர் அன்பில் அழுந்தலாயிற்று. இருவரும் ஒத்த கருத்துடையராய் விளங்கினர். சுந்தரர்தம் கண்கொள்ளாக் கவின் பொழிந்த திருமேனி கதிர் விரிப்ப, விண்கொள்ளாப் பேரொளியுடன் நின்றதைப் பரவையார் எதிர்நோக் கினர். அவ்வம்மையார்க்கு எண்கொள்ளாக் காதலின் முன்பு எய்தாதொரு வேட்கை எழுந்தது. நற்பெரும் பான்மை கூட்டிய காரணத்தால், முன்னேவங் தெதிர்தோன்றும் முருகனே? புெருகொளியால் தன்னேரில் மாரனே ? தார்ம்ார்பின் விஞ்சையனே ? மின்னேர்செஞ் சடையண்ணல் மெய்யருள்பெற் றுடையவனே ? என்னே என் மனந்திரித்த இவன்யாரோ ? எனகின்ந்தார். சேக்கிழார் பெருமானின் கவியின் ஆற்றலையும் கருத் தின் திறனையும் அறிதற்கு இவ்விரு செய்யுட்களே சிறந்த சான்ருகும். இக்கவிகள் இரண்டையும் பாராட் டாத பாவலர் இலர் ; காவலரும் இலர். இப்பாக்க களின் சொல் நோக்கும் தொடை நோக்கும் பொருள் நோக்கும் கண்டுவியந்து, தண்டமிழ்ப் புலவர் எவரி னும் இவரே விஞ்சியுள்ளார் என்று விரித்தும் உரைப் பார் ஆயினர். பரவையாரும் பரமனைப் பாடுவாரும் ஒத்த கருத்தினர் என்பதை மெத்த பொருத்தமாகப் பாடியுள்ளார். மணமகன், மணமகள் பொருத்தத் தைப் பற்றி இக்காலத்தில் பல்வேறு பொருத்தம் காண்பர். ஆனல் பண்டைநாளில் காதலர் இருவரின் பொருத்தம் ஆறுகையில், ' ஒத்தகலனும் ஒத்தகுண னும் ஒத்த கல்வியும் உடைய ஒருவனும் ஒருத்தி யும்” என்னும் இப்பொருத்தங்களையே கூறினர்.