பக்கம்:வையம் போற்றும் வனிதையர்.pdf/143

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

138 நம்பிக் குகந்த கங்கைமார் அழகையும் வதனச் சிறப்பையும், இடையின் நுண் மையையும், எத்துணைப் பொருத்தமுறப் புயல்சுமந்து விற்குவளை பவளமலர் மதிபூத்த விரைக்கொடியோ, என்று புனேந்து பாராட்டியுள்ளார் பாருங்கள் இத ல்ை கலம்புனேந்துரைத்தல் என்னும் துறையையும் ஈண்டு இயைத்துக் கூறியவர் ஆயினர். இவ்விரு செய் யுட் பொருட் பொலிவை மற்றும் பலவாறு விரித் துப்பகரலாம். தொட்டனத்துாறும் மணற்கேணி போன்று இவற்றை நவில்தொறும் நவில்தொறும் கயம்பல சுரங்துகொண்டே வரும். ஆதலின், இத் துடன் நிறுத்தி இனி மேலே செல்வோமாக. காவலூர்ப் பெருந்தகையார், மருங்குரின்ருரை அம்மங்கையார் யாவரென்று உசாவ, அவர்கள் உம் பர் தரத்தார்க்கும் சேர்வரிய உத்தமியாம் கங்கை பரவையார் என்று கவின்றனர். உம்பர்க்கும் சேர்வரி யார் என்றதனால், உம்பர்பிரான் ஒருவனேயே உவந்து நாம் வேண்டுவம் என்று உளங்கொண்டார். மெல்லிய லார் தமைவேண்டி வல்லியிடைப்பாகனரை வணங்கி நின்ருர். பரவையாரும் பரமனை கம்பியைத் தங்தருள கயந்துவேண்டினர். அன்பர் குறையை அகற்றி ஆளும் இறைவனர் நம்பிக்கும் கங்கைக்கும் தகுர்ேமையில் கல்வதுவை வினேயை முடித்திட்டார். இருவரும் மணியும் ஒளி யும் மாணவும், மணமும் மலரும் நிகர்க்கவும், உடலும் உயிரும் ஒப்பவும் ஒற்றுமை உணர்ச்சியுடன் இல்லற இன்பத்தினை இனிதில் நுகர்ந்து ஆளுடையபிரான் சரணுரவிந்தங்கள் சென்னியிலும் சிந்தையிலும் அலர் வித்து,