பக்கம்:வையம் போற்றும் வனிதையர்.pdf/152

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கம்பிக் குகந்த கங்கைமார் 149 இம்மகளார் தம்மையொத்த சிறுமகளிர் சில ருடன்கூடி வண்டல் பயின்றும், தண்டலே ஆடியும் இன்புடன் வளர்வாராயினர். சங்கிலியார் ஆடற் பருவமும் கடந்து மணப்பருவம் கண்ணினர். தம் மக ளாரது உடற்பொலிவைக் கண்ட இருமுது குரவர் உள்ளம் பூரித்தார். தண்ணிசை யாழும், தாழ்கடல் தரளமும் மண்ணிசை சாந்தமும், துய்ப்பார் அற்று வாளாயிருப்பின், அவற்றிற்கு யாது பயன் இசைவல் லான் யாழினை மீட்டால் அன்றிப் பூண்பார் முத்தி னேப் பூண்டால் அன்றி, பூசுவார் சாந்தினைப் பூசில்ை அன்றி, அவை பயனற்றுத் தம் பெருமையினே இழந்து நிற்கும் அன்ருே ஆகவே, அவற்றை நல்முறையில் பயன் படுத்துவோர்க்குப் பயன்படுத்துதல் அறிவு டைமை ஆதல்போலப் பருவமங்கையரைக் கடிமணம் புரிந்து கவினுறக் காண்டலே சீரிய முறையெனச் சிந்தித்த ஞாயிறுகிழார் தம் மனத்துக்கினிய மனைவி யாரை நோக்கி, பலவுறு கறுஞ்சாந்தும் படுப்பவர்க் கல்லதை மலேயுளே பிறப்பினும் மலைக்கவைதாம் என்செய்யும் ! கினேயுங்கால் நும்மகள் துமக்கும்.ஆங் கனேயளே. சீர்கெழு வெண் முத்தம் அணிபவர்க் கல்லதை ருேளே பிறப்பினும் நீர்க்கவைதாம் என்செய்யும் ! தேருங்கால் நும்மகள் நுமக்கும்.ஆங் கனயாளே. ஏழ்புணர் இன்னிசை முரல்பவர்க் கல்லதை யாழுளே பிறப்பினும் யாழ்க்கவைதாம் என்செய்யும். குழுங்கால் நும்மகள் நுமக்கும்.ஆங் கனேயாளே. " ஆதலின், கம் குலக் கொழுந்திாகும் திருமக ளார்க்குத்-திருமணம் முடித்தல் வேண்டாவோ? " என்று அறிவித்தார். இதனைக்கேட்ட அவர் மனைவி