பக்கம்:வையம் போற்றும் வனிதையர்.pdf/153

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

150 நம்பிக் குகந்த கங்கைமார் யார் கணவர்ை கருத்துக்குக் கடுகும் தவருத் தக வுடையார் ஆதலின், அவ்வாறே மணம் முடித்தற்கு ஆவன செய்யுமாறு அகங்குளிரக் கூறினர். சங்கிலியார் பொருட்கேளும் பொலிவுக்கேளும் உடைய எவரையும் மணக்க இசையாராய், இறைவன் பொருள் சேர் புகழ்புரிந்து திருவருள்பெற்ற ஒருவ னேயே மணக்கும் கள்ளமற்ற உள்ளம் உடையராய் இருந்தனர். பெற்ருேர் பேசியதை உடன் இருந்து கேட்டதும், ' என் விளையுமோ ? என் எண்ணத்தில் இடி விழுமோ? " என்று ஏக்கம் கொண்டவராய் உணர்வு மயங்கித் தரைமேல் சாய்ந்தார். அருமை மகளார். அவனியில் விழுந்து அயர்ந்ததைக்கண்ட அம்மை அப்பர் உளம் பதைத்துப் பரிந்தெடுத்துச் சீத விரைப் பனிநீர் தெளித்துத் தைவத்து சீதளோப சாரம் செய்தமைத்தார். சங்கிலியார் சிறிது மயக்கங் தீர்ந்து தெளிந்தபோது, அழகுக் கொழுந்தென அம ரும் மகளே ! உனக்கு உற்றது யாது?' என்று உருக்க மாய் வினவினர். சங்கிலியார் உள்ளதை உள்ளவாறு உரைக்க லுற்ருர் மந்தணமாக எதையும் மறைத்து வைத் திலர். தந்தையிர் ! தாயீர்! நீர் என் கடிமணம் குறித்துப் பேசிய அனைத்தும் காதுறக் கேட்டனன் யான். இம்மை இன்பத்துக்கு மட்டும் என்னே இன் மணம் கொள்ளும் கன்மகன் ஒருவனே நாட விரும் பாது, அம்மை இன்பத்திற்கும் அடியினைக் கோலும் ஆண்டவன் அருள்பெற்ற ஆண்தகை ஒருவனேயே அன்புடன் மனக்க அவாவுகின்றேன். ஆதலின், யான் விழையும் வேளினே வேட்டருள் செய்ய என்னைப் பணிப்பீராக. அதன்பொருட்டு யான் ஒற்றியூர்