பக்கம்:வையம் போற்றும் வனிதையர்.pdf/155

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

153 நம்பிக் குகந்த கங்கைமார் மேலும் இன்சொல் இனிதின்றல் காண்பான் எவன் கொலோ வன்சொல் வழங்கு வது? என்பதை மேற் கொண்ட வாய்மையர் என்பதும் அறிந்தாம். சங்கிலியார் எண்ணம் ஈடேறவோ, அன்றி யாது காரணங் தன்ேைலா, மகட்பேச விடுத்த மண வாளன் சின்னட்கட்கெல்லாம் மண்ணுடுவிட்டு விண் ணுடு உற்ருன். இவனது மறைவுகேட்ட மாதராரைப் பெற்றவர் மனம் மருண்டார். தம் மகளார் இறை யருள் பெற்றவனே மணக்க இருக்கையில் அதுபெருத இவன் விரும்பியதால் போலும் இறக்க நேர்ந்தது என்று காகதாலிய நியாயத்தால் கருதி இனி ஆவன செய்வதற்கு முனைந்து கின்றனர். ஞாயிறுகிழார் இனியும் தம் திருமகள் எண்ணத்தை எவர்க்கும் உரையாது வாளா இருப்பின், இதுபோல் இன்னம் பல ஏதம் நிகழும் என்று நினைத்தவராய்ச் சாதியருள் சிறந்தார் சிலர்க்குச் செப்பினர் : கங்கை செயலே உடன்பட ஒருப்பட்டார். திரு ஒற்றியூரில் சிறந்ததோர் மாடம் சமைத்தார். அம்மாடத்தில் மகளாரை அமர்த்தி இனி நீ ஈண்டு விழைந்தவாறே தியாகனை வேண்டித் தியானம் புரி வாய் ' என்று வேண்டுவ செய்து விடைகொண்டு போனர். அது கன்னி மாடமாய்க் கவினுடன் திகழ்ந் தது. இவ்வம்மையாருடன் சில கன்னியரும் உறு துணையாக உற்றனர். இக்காலத்து நாம் கானும் மேட்ைடுக் கன்னிமாடமுறை இருபதாம் நூற்ருண்டு எழுந்த புதுமுறையன்று. இஃது ஒன்பதாம் நூற் முண்டு முன்பிருந்தே வந்த தமிழ்நாட்டு முறையாகும் என்பதைச் சேக்கிழார் உணர்த்த உணர்ந்த நாம் எத் துணை இன்பங்கொள்ளவேண்டும் ? ஓர்மின் !