பக்கம்:வையம் போற்றும் வனிதையர்.pdf/156

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கம்பிக் குகந்த கங்கைமார் 153 சங்கிலியார் கன்னி மாடத்துத் தம் கடமைகளைச் செய்துவந்தனர். ' என் கடன் பணிசெய்து கிடப் புதே' என்னும் அப்பர் பெருமான் அருள்வாக்கிற் கிணங்க அரனர் தமக்கு அலர்மாலே தொடுக்கும் அருந்தொண்டில் ஈடுபட்டார். பூதகாதர் பொற் கோயில் காலந்தோறும் புக்கிறைஞ்சினர். அம்மை யார் கன்னியார் ஆதலின், ஆலயத்துள் எழினி வீழ்த் துத் தம்மை மறைத்து இண்டை கட்டி இன்புறுகை யில், இறைவனர் ஆவணத்தால் அடிமைகொண்ட ஆரூரர் அரனை வணங்க ஆங்குற்ருர். திரு ஒற்றியூரில் அன்பர் பலர், நல்ல நந்தன வனப்பணி செய்பவராய், நறுந்துணர் மலர் கொய்பவ ராய், கல்பனித்தொடை புனைபவராய், திருமஞ்சனப் பணிக்குள்ளோராய், அல்லு நண்பகலுங்திரு அலகிட் டுத் திருமெழுகமைப்போராய், எல்லையில் விளக் கெரிப்பவராய், திருமுறை எழுதுவோராய், வாசிப் போராய் ஈடுபட்டுத் துலங்குபவர்களே எல்லாம் வனப்பகையப்பர் கண்டு கண்டு கைதொழுது சென் றனர். அப்படிச் செல்பவர் திரை மறைவில் நறை மலர் தொடுக்கும் மண்டபத்தும் பார்வையிட்டார். தம்பிரான் தோழர் அம்மண்டபத்தை அடைந்த நிலையை ஆசிரியர் சேக்கிழார், புண்டரீகத் தடநிகர் பூந் திருமண்டபத் தினுட் புகுந்தார்.' எனப் புகன்ருர். இவ்வுவமையால் அதனுள் இருக்கும் அவ்வம்மையார் அழகினை விளக்கியதாயிற்று. மண்டபம் தாமரைத் தடமானல், அதில் இருப்பவர் திருமடங்தை என்பது தெரிகிறதன்ருே 1 ஆகவே, சங்கிலியார் பொங்கிய பேர் அழகுமிகு புண்டரீகத் திருவாவர் என்பது தானே பேர்திருகின்றது ? சங்கிலியார்ாம் அழகின்