பக்கம்:வையம் போற்றும் வனிதையர்.pdf/160

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நம்பிக் குகந்த கங்கைமார் 15? அணேவாய் !' என்று கழறினர். சிங்கிலியார் உள்ளக் கிடக்கை இன்னதென்பதை நன்கு உணர்ந்த இறை வர் ஆதலின், ஈசன் அருள் பெற்றவரை மணக்க இருக்கும் அம்மாதராருக்கு முன்னறிக்கையாகச் சால என்பால் அன்புடையான் ” என்று சாற்றினர். அவ் வம்மையார் பெருகு தவத்தால் ஈசர் பணி பேனும் கன்னியார் ஆதலின், அவரை விளிக்கும்போதும் விதி தவருது, ' சாரும் தவத்துச் சங்கிலி' என்ருர். தவ முடையவர்தாம் தவமுடையாரைச் சார இயலும், ஏனையர் சார எண்ணுதல் அவமே ஆகும் என்பதை அறிவிப்பார் போல் மேருவரையின் மேம்பட்ட தவத் தான்' என்று மேன்மை தோன்றப் பேசினர். தன்பால் அன்பே அன்றி அடிமையும் உடையவன் என்பதை அறிவிக்கவே, "யாரும் அறிய யான் ஆள உரியன்." என்று உரைத்திட்டார். அவனே உன்பால் ஆசை கொண்டு மணக்க மனங்கொண்டான் ஆதலின். நீ அவனே மணத்தலில் மாசு இல்லே என்பார், 'நீ அவனே மணத்தால் அணைவாய் மகிழ்ந்து' என்றும் மலர்வாய் திறந்து அறிவித்தார். இத்துணே துண் பொருள்களும் அடங்கச் சேக்கிழார் உரைத்ததை நாம் உணர வேண்டாவோ ?. எம்பிரான் இசைத்த மாற்றம் ஏந்திழையார் செவிஏற்று, எந்தையிர், நீரே சொல்லின் யான் எதி ருரை இயம்பலாமோ ? எனினும், என்னே விரும்பும் எழிலுடையார் ஆரூரர் செல்லும் அவாவுடையார் ஆதலின், மணந்தபின் தணந்து செல்லின் என் செய் வது ?' என்று வினவினர். ' அன்புடை அணங்கே, நீ அறைவது உண்மைதான். இதுவே ஏதுவாத் தடை செய ஒண்னது. நம் சுந்தரன் நின்னையும் நின் இடத்