பக்கம்:வையம் போற்றும் வனிதையர்.pdf/162

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கம்பிக் குகந்த கங்கைமார் 159 கோயிலைக் கண்டபோதுதான் கும்பிடும் கொள்கை தோன்றக் கும்பிடுகின்றனர். தம்மையும் மறந்து தம் கைகளைத் தலே மேல் தூக்குகின்றனர். இஃது உலகி யற்கை. ஆகவேதான் காவலூர் காதர்ை இவற்றை உட்கொண்டு தம் நாதைைரக் கோயிலில் இராது மகிழ்க்கீழ் இருக்கும் வண்ணம் வேண்டினர் என்க. இறைவர் மகிழ்க்கீழ் இருக்க உடன்பட்டதையும், சங்கிலியாரிடம் சென்று சாற்றிவிட்டனர். இறை வர் இன்னணம் செய்தது முறையோ என்னில், முறை தான். அவர் வஞ்சகம் அற்ற நெஞ்சினர். தம் உரை கேட்டு மணக்க இருக்கும் அம்மாதரசியார்க்குத் தம் மால் கவலே நேராது இருக்கவே இவ்வாறு கூறினர். ஆல்ை, சேக்கிழார் பெருமான் இச்சிக்கலில் அகப்பட எண்ணுராய், சுந்தரர்பால் திருவிளையாடல் புரிந்த ருள எண்ணியோ ? அன்றிச் சங்கிவியார் வழியடிமை யின் பெருமை அறிந்து செய்ததேயோ யாம் அறி யோம்' என்று பாடி அறிவித்துள்ளார். பொழுது புலர்ந்தது. புள் ஒலி செய்தது. வன் தொண்டர் வனிதையின் வரவு நோக்கி நின்றிருந்தார். சேய் இழையார் திருப்பள்ளி எழுச்சிக்கு மலர் தொடுக்கும் தூய பணி புரியத் திருக்கோயில் சென்று புக்கார். ஆரூரர் அன்னரை அண்மி ' இவனின்று யான் பிரியாமைக்கு இசையும்படி இயம்பத் திங்கள் முடியார் திருமுன்போதுவீர் ' என்றழைத்தார். சங் கிலியார் நாணம்மிக்கு, ஒதுங்கிப் பூ மண்டபத்துள் புகுந்தார். அம்மையார்க்கு அருகு இருந்த தாதியர், " இதற்காக இமையவர்கள்தம் பெருமான் முன் சாற்றுவது அடாது. மகிழ்க்கீழ்க் கூறலுைம் அமை யும்” என மொழிந்திட்டார். இசைஞானி மகனரும்