பக்கம்:வையம் போற்றும் வனிதையர்.pdf/163

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

160 நம்பிக் குகந்த கங்கைமார் மற்றதனுக்கு இசைக்திட்டார். மறுமாற்றம் உரைத் திலர். யாவரும் சென்று மகிழை அண்மினர். முனைப் பாடிப் புரவலனர் முக்காலும் வலம் வந்தார். இங்கு யான் அகலேன்' என்றும் அறைந்திட்டார். சேக்கிழார் நூல் ஒர் உண்மை வரலாற்று நூல் ஆதலின், அதனில் கூறப்பெறும் வரலாறுகட்கு அகத்தும் புறத்தும் சான்றுகள் அனந்தம் உண்டு. சுந்தரர் பெருமானே தம் திரு வாயால் தேவாரத்தில் திரு ஒற்றியூரில் நிகழ்ந்த நிகழ்ச்சிகள் அனைத்தையும் மொழிகின்ருர். பொன்னவிலும் கொன்றையினய் போய்மகிழ்க்கீழ் இருஎன்று சொன்ன எனக் காளுேமே குளுறவு மகிழ்க்கீழே என்னவல்ல பெருமானே ! என்பது அகச்சான்று. சேக்கிழார் மொழிகள் புறச் சான்று. குளுக்குப் பின்னர்க் கடிமணம் நிகழ்ந்தது. மண மக்கள் இருவரும் ஒருவரை ஒருவர் கண்டு கேட்டு, உண்டு, உயிர்த்து உற்றிருந்தார். இன்பத் துறையி னில் இறங்கினரேனும், இருவரும் தம்பிரான் திருவடி களில் உணர்வு இறையும் பிழையூாராய் முப்போதும் போற்றிப் பூசனை புரிவார் ஆனர். இங்ங்னம் காட் களும் திங்களும் பல கடந்தன. ஈண்டு ஒர் இன்றியமையாக் குறிப்பினேயும் குறிப் பிடுவது தக்கதாகும். பெரிய புராணம் வெறும் புரா ணம் அன்று. அது ஒர் ஒப்புயர்வற்ற வரலாற்று நூல். சீர்த்திருத்தக் கருத்துக்கள் பல தன்னகத்தே கொண் டது. இந்நூ லால் கல்ப்பு மணம் (Inter-Marriage) புரிந்துவந்த வரலாற்றையும் உணரலாம். நம்பியாரு ரர் மாதொரு பாகர்ைக்கு வழிவழி அடிமை செய்யும்