பக்கம்:வையம் போற்றும் வனிதையர்.pdf/169

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

166 வனிதையர் வயங்கிய காலம் வழங்கப்பட்டுவந்துள்ளது. அங்கனம் இருக்க, அம் மையார் பாடிய பாடல்களில் ஒன்று மூத்த திருப் பதிகம் எனச் சுட்டிக் காட்டப்படுவதன் குறிப்பு, அஃது அம்மூவர் பதிகங்கட்குமுன் தோன்றினமை யைப் புலப்படுத்தற்கே என்பது உறுதியாகின்றது. உள்ளத் துறவுடைய உத்தமியாம் தில்கவதி யார் திகழ்ந்த காலத்தைப் பற்றித் தீர ஆராயவேண் டுவதில்லை. திலகவதியார் திருநாவுக்கரசருடைய தமக்கையாராதலின், அவ்வம்மையார் காலம் திரு காவுக்கரசர் திகழ்ந்த காலமாகிய கி. பி. ஏழாம் நூற் ருண்டே என்பது முடிந்த முடிபாகும். கொண்களுர்க்கேற்ற கோதையாராம் அப்பூதி அடிகளாருடைய வாழ்க்கைத் துணைவியார் வாழ்ந்த காலமும் கி.பி. ஏழாம் நூற்ருண்டே என்க. காரணம் அப்பூதியார் அப்பர் பெருமானத் தம் அகத்துப் பூசித்துப் பேறு பெற்றமை அவர் வரலாறு கூறுவதி னின்று அறிவதே ஆகும். கனவளுர் விரதம் காத்த காரிகையாம் சிறுத் தொண்டரின் இல்லக்கிழத்தியாரும், தென்னர் குல பழிதீர்த்த தெய்வப் பாவையரம் மங்கையர்க்கரசி யாரும் மாண்புறத் திகழ்ந்த கர்லமும் கி. பி. ஏழாம் நூற்ருண்டே என்பதை அறுதியிட்டு உறுதியாகக் கூறிவிடலாம். எங்ங்ணம் எனில், கி. பி. ஏழாம் நூற் ருண்டில் இலகிய திருஞான சம்பந்தரை அன்புடன் சிறுத்தொண்டர் அழைத்து உபசரித்தார் என்பதா லும், மங்கையர்க்கரசியார் புகலிவேந்தரைத் தம் கண வர்ைகாய்ச்சல் நீங்கத் தம் அரண்மனைக்கு அழைத் தருள்சியுள்ளார் என்பதாலும், நன்கு-புலனுகின்றது என்க்.