பக்கம்:வையம் போற்றும் வனிதையர்.pdf/171

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

168 வனிதையர் வயங்கிய காலம் ஆதலின், அப்பெரியார்கட்கு வாழ்க்கைப்பட்ட அம் மைமார்கள் இருந்த காலத்தைக் கி. பி. ஏழாம் நூற் ருண்டிற்குப் பின்னும் கி. பி. ஒன்பதாம் நூற்ருண் டிற்கு முன்னும் அமைந்த இடைப்பட்ட காலம் என்று ஒருவாறு கூறலாம். - மனைய்ை மங்கலம் ஆக்கிய மடங்தையாம் ஏயர் கோளுரின் ஏந்திழையாரும், நம்பிக்குகந்த நங்கை மார்களான பரவையாரும் சங்கிலியாரும் சிறப்பு டன் திகழ்ந்த காலம் கி. பி. ஒன்பதாம் நூற்ருண்டே என்பதில் எள்ளளவும் ஐயமில்லா மெய்வரலாருகும். எவ்வாறெனில், பரவையாரும், சங்கிலியாரும் கி. பி. ஒன் பதாம் நூற்ருண்டினரான கம்பியாரூரர்க்கு வாழ்க்கைப்பட்ட வனிதையர்கள் என்பதனலும், ஏயர் கோனரின் ஏக்திழையாரைக் காணும் வாய்ப்பு காவலூர் நம்பிக்கு வாய்த்ததாக, ஏயர் கோனர் வரலாறு இயம்புதலானும் என்க. இனி, நம்பியாரூரர் இருந்த காலம் கி. பி. ஒன்ப தாம் நூற்ருண்டே என்பதை நிறுவுதல்வேண்டும். முனைப்பாடி காதர்ை தம் திருப்பதிகங்களில், பல் வேறு இடங்களில், சொல்வேந்தரையும், தோணிபுரத் தோன்றலாரையும் சுட்டிச்சுட்டிப் போற்றிப் போற் றிப் பாடிப் புகழ்ந்துள்ளார். அவ்விருவர் காலம் இ.பி. ஏழாம் நூற்ருண்டு என்பது முன்பு தக்க அகச் சான்று புறச்சான்றுகளுடன் அறிவிக்கப்பட்டுள் ளது. இதல்ை, சுந்தரர் இலங்கிய காலம் கி.பி. ஏழாம் நூற்ருண்டிற்குப் பிற்பட்டது என்பதில் ஆசங்கை இல்லை. பின், பரவை கேள்வர் திகழ்ந்த காலம் கி.பி. ஒன்பதாம் நூற்ருண்டு என்பதனை எங்ஙனம் பெற். உரும் எனின், அதனையும் ஈண்டு உன்னி அறிவோமாக.