பக்கம்:வையம் போற்றும் வனிதையர்.pdf/4

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முகவுரை உலகெ லாம்.உணர்ந் தோதற் கரியவன் நிலவு லாவிய நீர்மலி வேணியன் அலகில் சோதியன் அம்பலத் தாடுவான் 事 மலர்சி லம்படி வாழ்த்தி வணங்குவாம் -சேக்கிழார் தண்டமிழ்ப் புலவர்களுள் தெய்வப் புலவர் எனத் திகழப் பெறுபவர் இருவர். அவர்களே சேக் கிழார் பெருமாருைம் செங்கா போதாரும் ஆவர். அவர் கள் எய்திய பேறு எவரும் எய்திலர். புலவர்களையும் அவர்கள் பாத்த நூல்களேயும் புகழ்ந்து கூறுவது தொன்று தொட்ட மரபு. அங்கனம் புகழ்ந்து கூறப் பட்ட பாடல்கள் தனியன்கள் எனப்படும். ஆனுல், தனி நூல் வடிவில் பற்பல பாக்கள் பொருந்தப் பாடப் பட்ட பெருமை இவ்விரு பெரும் புலவர்களே பெற்ற வர் எனில், இவர்கள் மாண்பினை இயம்பவும் வேண் டுமோ? சேக்கிழார் பெருமானர் புகழினை உணர்த்தும் தனி நூல் சேக்கிழார் பிள்ளைத் தமிழ் என்பது. வள்ளு வர் இசையை இசைக்கும் தனி நூல் திருவள்ளுவ மாலை என்பது. சேக்கிழார் பெருமானரைப் பற்றிய தனிப் புராணம் ஒன்று உண்டு என்பதையும் ஈண்டே நினைவு கூர்வோமாக. இன்ைேரன்ன சீரும் சிறப்பும் பேரும் புகழும் வாய்க்கப்பெற்ற சேக்கிழார் பெருமானர் பாடிய நூலே பெரிய புராணம் என்னும் பெருநூல் ஆகும். புராணம் என்றதும் பேதுறல் வேண்டா. ஈண்டுப் புராணம் என்றது தமிழ் நாட்டில் உண்மை வாழ்வு