பக்கம்:வையம் போற்றும் வனிதையர்.pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முகவுரை நடாத்திய பெரியாரது பழைய வரலாற்றை உணர்த் தும் நூல் என்னும் பொருள் அமைந்த ஒன்ருகும். இந்நூல் காவியப் பண்பு க்வினுறப் பெற்றது. அக்கண் கொண்டு காண்போர் ஒன்பான் சுவையை ஒருங்கே நுகரலாம். தமிழ்ச் சுவை விழைவோர் தாழ்வின்றிச் சுவைக்கலாம். கவிநலம் கருதுவோர் கண்டு களிக்கலாம். சீர்திருத்தக் கருத்துக்களைச் செம்மையுறக் காண அவாவுவோர்க்கும் இந்நூல் அருந்துணை புரியும்' என்பதில் எள்ளளவும் ஐயம் இன்று. இக்காரணங்களால் அன்ருே தமிழின் மேலாந்தரத்தை அறிவதற்கு எடுத்துத் கூறப்பட்ட நூல்கள் ஆறனுள் இதுவும் ஒன்ருக எடுத்து இயம் பப்பட்டுள்ளது. இதனை _ வள்ளுவர் நால் அன்பர்மொழி வாசகம்தொல் காப்பியமே தெள்ளுபரி மேலழகர் செய்தவுரை-ஒள்ளியசீர்த் தொண்டர் புராணம் தொகுசித்தி ஓராறும் தண்டமிழின் மேலாங் தரம் என்னும் உமாபதி சிவாசாரியார் வாக்கால் நன்கு அறியலாம். உலகப் படைப்பில் ஆண் பேண் என்னும் இரு படைப்பு இயற்கையில் அமைந்த முறையாகும். இப் பகுப்பில் யாவர் உயர்ந்தோர் யாவர் தாழ்ந்தோர் என்று அறுதியிட்டு உறுதியாகக் கூற இயலாது. உலக வாழ்வுக்கு இவ்விரு பகுப்புக்களும் ஒன்றுக் கொன்று பெருங் துணையாக இருப்பனவாகும். ஆண் இன்றிப் பெண் இல்லை; பெண் இன்றி ஆண் இல்லை. இவ்விருவருமே ஒன்றுபட்டு உலகைப் படைக்க வேண்டியவராகின்றனர். இதல்ை அன்ருே, “சத்தி