பக்கம்:வையம் போற்றும் வனிதையர்.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முகவுரை

தீன் சிவத்தைச் சாரில் எத்தொழிலும் வல்லதாம் என்று மெய்யறிவு நூல்கள் சாற்றிவருகின்றன. ஆத வின், ஈண்டுப் பெண்ணுலகப் பெருமக்களுள் சிறப் படைந்த ஒரு சிலரைக் குறிப்பிடவே இப் ப்ெரிய புராணமாம் பெருநூலிலிருந்து பெருமை பெற்ற தொண்டர் தமக்குப் பெருந்துணைவியராய் இருந்த வாழ்வரசியர் சிலரது வரலாற்றுடன் வையம் போற் றும் வனிதையர் என்னும் பெயருடன் இந்நூல் வெளி வரலாயிற்று. இவர்கள் தம் தம் கொழுநன்மார் களின் வாழ்விற்குத் துணைவியராய் இருந்ததால்தான் வையம் போற்றும் வனிதையர்களாய்த் திகழும் பேறு பெற்றனர். இவர்கள் துணையை அவர்கள் பெற்றிலர் எனில், தொண்டர்களின் நோன்பு தொடர்ந்து நடந்திராது. அவர்களும் பெரியர் என்னும் பெயரையும் எய்தியி ரார். ஆதலின், இவர்கள் வையம் போற்றும் வணி தையர் என்பது எல்லாப்படியாலும் ஏற்றமுடை யதேயாகும். இம்மங்கையர் திலகங்களின் வாழ்க்கைக் குறிப் புக்கள் மட்டும் இதில் வரையப்படாமல், சேக்கிழார் கவிநயமும் ஊடே ஊடே உணர்த்தப்பட்டு வந்திருப்ப தும், இடை இடையே எழும் ஐய வினுக்களுக்குக் கூடு மான வரையில் விடைகள் இறுக்கப்பட்டிருப்பதும், மற்றும் பல புதுப் புது அரிய குறிப்புக்கள் குறிப் பிடப்பட்டிருப்பதும், இதில் கூறப்பட்டவர் காலம் இன்னது என்று எழுதப்பட்டி ருப்பதும் தமிழ் கலங் கருதுவோர்க்கும் வரலாற்று உண்மையை அறிய அவாவுவோர்க்கும் ஒரு புது விருந்தர்கப் பொலியும் என்பது என் துணிபு.