பக்கம்:வையம் போற்றும் வனிதையர்.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கணவனர் விரதம் காத்த காரிகை நில உலகில் குடும்பம் என்பது ஒரு சகடம் போன்றது. அச்சகடம் செம்மையுறச் செல்ல வேண்டில், அதில் பூட்டப்படும் பகடுகள் தம்முள் மாறின்றி இழுத்துச் சென்ருல் அன்றி, அச் சகடம் செல்லாது. ஆகவே, குடும்பமாகிய சகடத்திற்கு எருதுகளாக அமைபவர் கணவனும் மனைவியுமே அன்றி, வேறல்லர். இது குறித்தே மருவிய காதல் மனேயாளும் தானும் இருவரும் பூண்டுய்ப்பின் அல்லால்-ஒருவரால் இல்வாழ்க்கை என்னும் இயல்புடைய வான்சகடம் செல்லாது தெற்றி ம்று நின்று என்கிறது அறநெறிச்சாரம். கற்பனைக்கு ஊற்ரும் துறை மங்கலம் சிவப்பிரகாச சுவாமிகளும் " காதல் மனையாளும் காதலனும் மாறின்றித் தீதில் ஒருகருமம் செய்பவே '’ என்று செம்மையுறச் செப்பிச் சென்றனர். இன்பம் வரினும் துன்பம் உறவரினும் இவற்றை இருவரும் பங்கிட்டே துய்க்க வேண்டும். ' தோகைக் கும் தோன்றற்கும் ஒன்ருய் வரும் இன்ப துன்பங் களே ' என்று ஆளுடைய அடிகளும் அருளிப் போயி னர். இவ்விலக்கணங்கட்கு இயைய ஒழுகியவரே ஈண்டு எடுத்து இயம்பப்போகும் இலங்கிழையார் ஆவர். 9 с. திருமகட்கு உறைவிடமாய்த் திகழ்வது திருச் செங்காட்டங்குடி என்னும் திருப்பதியாகும். அப்