பக்கம்:வையம் போற்றும் வனிதையர்.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

76 தென்னர் குல பழிதீர்த்த தெய்வப் பாவை . தாகவே எண்ணும் ஒருமைப் பாடுடையர் ஆதலின், அர்ச்ன் அழைப்புக்கு இணங்கி வருவர் என்று அறிந்த அமைச்சரும் அன்புடைச் செல்வியாரும் தாமே சென்று அழைக்க மடத்திற்கு ஊர்திமேல் சென்றனர். மடத்தில் ஞான சம்பந்தர் வீற்றிருந்த கோலத்தை, ஞானத்தின் திருவுருவை நான்மறையின் தனித்துணையை வானத்தின் மிசையன்றி மண்ணில்வளர் மதிக்கொழுங்தைத் தேனக்க மலர்க்கொன்றைச் செஞ்சடையார் சீர்தொடுக்கும் கானத்தின் எழுபிறப்பைக் கண்களிப்பக் கண்டார்கள். இம் முறையில் கண்ட இருவரும் தாம் வந்த காரணம்கூறக் கெளனியர் குலாதிபர் அங்கயற் கண்ணியின் மணுளனே அகத்துள் கொண்டு அரண் மனே வந்துற்ருர். பாண்டிய மன்னன் தன் வெப்பு கோயினைப் பொறுக்கலாற்ருது தீர்க்குமாறு வேண்டத் திருக்கழு மலத் திலகனர் நீறு பூசி நோயை நீக்கினர். பின்பு அனலும் புனலும் கரியாகத் திருநெறியின் சீர்மை யினை விளக்கிக் காட்டப் பஞ்சவன் பணவக் குமரனர் பாதம் போற்றிச் சமண் நீங்கிச் ன்சவளுன்ை. வாழ்க அந்தணர் வானவர் ஆனினம் வீழ்க தண்புனல் வேந்தனும் ஓங்குக ஆழ்க தீயதெல் லாம்அரன் காமமே குழ்க வையக மும்துயர் தீர்கவே. என்னும் திருப்பதிகம் ஒதி, வேந்தனும் ஓங்குக ! என்னும் வாக்கால் பாண்டியன் கூனையும் கிமிரச் செய்து நெடுமாறன் என்னும் வாழ்வையும் ஞான போனகர் ஈந்தார்.