பக்கம்:வையம் போற்றும் வனிதையர்.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தென்னர் குல பழிதீர்த்த தெய்வப் பாவை 75 ஏற்ற எடுத்துக்காட்டாகச் சேக்கிழார் செய்யுள் திகழ்கிறது எனில் வேறு என் கூறுவது ? அப்பாடல் பையவே என்னும் சொற் பொருளை விளக்கவந்த பாடல் ஆதலின், திரிசொல் இன்றி, இயற்சொல் பெய்து பாடப்பட்டிருத்தலின், விளக்கம் இன்னவாறு அமைதல் வேண்டும் என் பதையும் உடன் விதித்தவ்ாறும் ஆயிற்று, இஃது அரு மையில் எளிமையையும் காட்டியவாருயிற்று. சேக் கிழார் பாடல் அனைத்தும் மாண்ட கேள்வி வல்லார் கவிபோல் பலவான் துறைதோன்ற வாய்த்துச் செல் லாறு தோறும் பொருள் ஆழ்ந்து தெளிந்து தேயத்து எல்லாரும் வீழ்ந்து பயன்கொள்ளும் நிலையில் இருப் பதை எவரும் காணலாம். சமயக் கண் கொண்டு காணலே நீக்கிக் காவியக் கண் கொண்டு காண்பார் இக்கருத்தை ஒவ்வாமல் இருக்க ஒண்னுமோ? வெப்புநோய் செழியனைச் சேர்ந்தது. மருத்து நூல் வல்லவர் தங்கள் பல்கலை அறிவால் கோய் தணி யும் வகைதேடினர். இஃது இயற்கையால் அன்றிச் செயற்கையால் எழுந்த நோவாதலின் எளியிடை இழுதுபோல் வளர்தல் ஆயிற்று. மன்னன் நோயால் மாழ்கல் உற்ருன். அருகு இருந்த அமைச்சரும் அரு மனைக் கிழத்தியாரும், பிள்ளையார் அருளால் இது பெயரும்” என்றனர். அற்றேல் அழைமின் ' என்று அரையன் அறைய, அதுபோது அரசனுக்கு ஆக்கங் தேடும் இருபேர் அறிஞர்கள் ; வறிஞன் பொற்கிழ் வாய்க்கப் பெறின், எத்துணை கழிபேர் உவகை எய்து வானே, அத்துணை இன்பம் அகத்துக் கொண்டனர். ஞான போனகர் அரசன்ே ஆயினும், ஆண் டியே ஆயினும் வேற்றுமை கருதாது, ஒரு படித்