பக்கம்:வையம் போற்றும் வனிதையர்.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

74 தென்னர் குல பழிதீர்த்த தெய்வப் பாவை பையவே என்னும் சொல்லின் பொருகின் விளக்க எழுந்த பாடல் இது. அச் சொல்லின் விரி வுரை உரைக்கப் பாடப்பட்ட செய்யுள் இது. ஆளு டைய பிள்ளையாரின் அகத்தை யுணர்ந்து ஆக்கப் பட்ட யாப்பு இது. தீப்பிணி பையப் பற்ருது விரை யப் பற்றின், பாண்டியன் இறக்கவும் நேரும். 'இறக் தால் பாண்டிமாதேவியார் மங்கல நாண் இழந்து அமங்கல கங்கையாய் வாழநேரும். ஆதலால், இது நேராவண்ணம் இருக்கவே அன்புடைய அகத்தால் பையவே என்ருர் என்றும், குலச் சிறையார் அர சன் உய் வகையில் ஆசைகொண்ட அன்பர் என்பதை அறிந்து அதன் பொருட்டும் பையவே என்று பகர்க் தார் என்றும்,தீவைக்க உடன்பட்டது அரசன்குற்றம் ஆதலின், அவனும் அபராதன் உற்ருன், என்பதால் அத்தீப்பிணி அவனைச் சாரவே அவன்பால் உய்த்தும், அவன் பின்னல் உய்யவேண்டிப், பையவே என்று பண்புடன் பகர்ந்தார் என்றும், அரசன் அழிவையு முது, சிவநெறியடையும் பேறும், தாமே தீண்டும் பேறும் பெறும் வாய்ப்புடையன் ஆதலின், அவன் உடல் ஊறு உருதிருக்கவே பையவே' என்ருர் என் றும், இன்ைேரன்ன கயங்கள் பல பொதுளவே “ பையவே' எனப் பாடினர் என்றும் சேக்கிழார் தெரி விப்பது எத்துணை நயமுடையதாகக் காண்கிறிது பாருங்கள் ? இதுவன்ருே விளக்கம்! புவியிலுக் கணியாய் ஆன்ற பொருள்தந்து புலத்திற் ருகி அவியகத் துறைகள் தாங்கி ஐந்திணை நெறியளாவி சவியுறத் தெளித்து, தண்ணென்று ஒழுக்கமும் தழுவிச் சான்ருேர் கவி ' என்று கவியின் இலக்கணம் கூறிய கம்பர் கருத்துக்கு