பக்கம்:வையம் போற்றும் வனிதையர்.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

84 தாலியை ஈந்த தையல் போன்ற தன்மையதே ஆன்றவர்க்கு வரும் வறும்ை யும். சுடச்சுடரும் பொன்போல் ஒளிவிடும் துன்பம் சுடச்சுட நோற்கிற் பவர்க்கு. என்று அன்ருே தமிழ் மறையும் முழக்குகின்றது? ஆகவே, கலயனர் வறுமையுற்றும் தம் செய்பணி யைத் தவருது நடத்தி வந்தார். இயற்கை வறுமையாயின் இலம்பாட்டுடன் நின் றிருக்கும். இவர்க்கு வந்தது செயற்கைச் செல்லல் ஆதலின், குலமும்பாடு உற்றிடச் செய்தது. தம் தொண்டு முட்டுப்படாதிருக்க நிலத்தை விற்ருர். தனத்தை இழந்தார். மாடு ஆதிய அடிமையும் அழித் தார். இதல்ை சுற்றமும் மக்களும் துன்புறலாயினர். இவரால் விற்கப்பட்டது கன்னிலம் என்றதையும், இழந்த தனங்கள் பன்னெடுக் தனங்கள் என்றதை யும் கருதற்பாலன. கன்னிலம் என்றதால் அவை கன்செய் நிலங்கள் என்பதும், அவற்றில் நல்ல விளைவே விளையற்பாலன என்பதும், பன்னெடுங் தனங்கள் என்பதால் அள்ள அள்ளக் குறையா அருங் தனம் என்பதும் அறியக்கிடக்கின்றன ! அவ்வரும் பொருள்களையும் இழந்து இவர் இப்பணிதலை மேற் கொண்டார் என்பதால் இவரது தலையாய அன்பின் திறம் புலகிைன்றது. இங்கிலேயில் கலயனரிடம் இந்த கன்னிலே இன்னல்வங் தெய்தினும் சிங்தை நீங்காச் செயலின் உவந்திட என்னும் அருங்குணமே விஞ்சிநின்றது. இல்லத்தில் உணவுக்குரியன ஒன்றும் இல்லை. இருபகல் உணவு இன்றி மைந்தரும் ஒக்கலும் கைந்து