பக்கம்:வையம் போற்றும் வனிதையர்.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கணவரைத் திருத்திய காரிகை 91 இங்ங்னம் செய்கின்றனர் போலும் என்றுக் கருதிப் புலவர்கள் இவர்கள் குலத்தைக் குறிப்பிடும்போது வேட் கோவர் குலத்தவர் என்று குறிப்பிட்டும் பேசு வர். வேள் என்னும் சொல் மண் என்னும் பொரு ளைத் தருவது. இப் பொருளில்தான் உழவர்கட்கு வேளாளர் (வேள்-ஆளர்) என்ற பெயரும் வழங்கப் பட்டு வருகின்றது. ஆகவே, குலாலனர் குலத்தவரைக் குறிக்க வேட்கோவர் குலம் என்று கூறுதல் சாலவும் பொருத்தமானதே. ஆல்ை, அருண்மொழித் தேவர் இக்காரணம் கருதிமட்டும், வேட்கோவர் குலத்து வந்தார்.' என அவ்வன்பரைக் குறிப்பிட்டிருப்பதாக நாம் கருதுவதற்கு இல்லை. அவ்வன்பர் வாழ்க்கை வரலாற்றுக் குறிப்பினை நம் தொண்டர் சீர்பரவுவார் முன்னரே கன்கு அறிந்திருந்தார் ஆதலின், அவ்வாழ்க் கைக் குறிப்பின் கருத்தினைக் கொண்டே வேட் கோவர் குலத்து வந்தார் என்று கூறினர். அதாவது மன் மதனையும் கோபிக்கும் குலத்தவர் என்பதே அக் குறிப்பினை உணர்த்தும் கருத்து. வேள் என்னும் சொல் மன்மதன் என்றும் பொருள் தரும். இவ்வாறு இவ்வன்பர் மன்மதனேக் கோபித்த குறிப்புப் பின் வரும் நிகழ்ச்சிகொண்டு உணரப்படும். நீருக்கு நுரையும், பூவுக்குப் புல்லிதழும், கெல் லுக்கு உமியும் இருப்பது இயற்கை. அதுபோல, இக் குலாலனர் தம்பால் அன்பர் பணியும் அரன் பூசை நேசமும் ஒருங்கே உடையவரேனும், இன்பத்துறை யிலும் சிறிது எளியவராய் விளங்கினர். இதற்குக் காரணம் அவரது இளமைக் கூரேயாகும். இளமை மீது ர இன்பத்துறையில் எளியரானர். என்றே சேக்கிழார் செப்பினர். இதல்ை, தம் கற்பிற்குரிய