பக்கம்:வையைத் தமிழ்.pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இறவாத கவிதை 97 கருமத்தை மேன்மேலும் காண்போம்; இன்று கட்டுண்டோம்; பொறுத்திருப்போம்; காலம் மாறும்; தருமத்தை அப்பொழுது வெல்லக் காண்போம்; தனுவுண்டு காண்டியம் அதன்பேர் என்ருன்,"(பாஞ். 238) என்னும் பாடல் உலகம் உள்ளளவும் செருக்கித்திரியும் அரசுகளுக்குப் பாடமாக அமைகின்றதன்ருே நான் இன்று இந்த நெறியிலே தமிழ் மக்கள் முன் இப் பாடலே இட்டு-பாரதியாரின் இறவாத கவிதைகளே யிட்டு-என் உரையை முடிப்பேன். ஆம்! நல்லவர் வாட்டம் இறுதியில் நன்மைக்கே வழி காட்டும். ஆகவே, உலகம் என்றென்றும் வாழ கலமாற்றி, அனைவரையும் அனைத்தையும் ஒத்து கோக்கி, வையத் தையும் வாழவைத்து, நாமும் வாழ்வோம். அவ் வாழ்வைப் போற்றும் கவிதைகளே இறவாத கவிதைகள்’. அவை காட்டும் நெறிகளே இறவாத கெறிகள்."அறம் வெல்லும் பண்பே இறவாத பண்பு! *அத்தகைய இறவாத கவிதையும் அவை காட்டும் பண்பும் பயனும் வாழ்க வளர்க' எனக் கூறி என் உரையை முடித்துக்கொள்கின்றேன். வாழ்க பாரதி யாரின் இறவாத கவிதைகள்! வளர்க அவர் புகழ் நெறிகள்! -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வையைத்_தமிழ்.pdf/103&oldid=921706" இலிருந்து மீள்விக்கப்பட்டது