பக்கம்:வையைத் தமிழ்.pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

£96 வையைத் தமிழ் விளக்கி நின்ற போதிலும்கூட, நாட்டில் நீதி கெட்டு, நேர்மை யற்று, மக்கள் வாட்டப்பெறுவதைப் பார்க் கின்ருேம். உண்மைக்கும் நேர்மைக்கும் நீதிக்கும் பண்புக்கும் பாடு படுகின்ற மக்கள் பாதாளத்தில் தள்ளப்பெற, அதர்மம், கொடுமை, ஆணவம் அனைத்தும் தலே விரித்தாடுவதை இன்று உலகில் காண்கின்ருேம். இந்த நிலை உலகில் என்றென்றும் நிலவும் கிலேதான். இதைப் பாரதியாரும் காண் கின்ருர். எனவே, இந்த கொடுமையின் வெற்றியும் வஞ்சகத்தின் வாழ்வும் என்றென்றும் கிலேயா எனக் காட்டுகின் ருர் அவர். ஆங்கில ஏகாதிபத்தியக் கொடுமையினே உள்ளத்து வைத்து, அதன் கொடுமை யெல்லாம் சில காலத்தில் அழிய வேண்டுவதுதான் என்று கூறி, என்றென்றும் நாடாளும் கல்லவர், அறநெறி பற்றி, மக்கள் அல்லல் மாற்றிச் செம்மை கலம் பரப்பி ஆளவேண்டும் என்கிருர். அவ்வாறு, ஆளாது தம் அகங்காரத்தால் செருக்குற்று காட்டில் அல்லலேயும் அவதியையும் பிணைத்து மாற்ருரையும் மற்றவரையும் வம்புக்கு இழுத்து வாடவைப்பார் களேயாயின், அவர் தம் வாழ்வு என்றென்றும் இராது. என்றும், விரைவில் அழிந்தொழியும் என்றும், முடிவில் அறமே வெற்றி பெறும் என்றும் கூறி, உலகம் உள்ளளவும் நிலைக்க வேண்டிய உண்மையை உணர்த் துகின்ருர், ஆகவேதான் அவர் கவிதை "இறவாத கவிதை' ஆகின்றது; பாஞ்சாலி சபதத்தில் துரியோதனன் கொடு மையை விளக்குமுகத்தான், அவன் கொடுமை, என்றென்றும், சிறக்காது என்றும், அறமே இறுதியில் வெல்லும்மென்றும் காட்டுகின்ருர். . "தருமத்தின் வாழ்வதனைச் சூது கவ்வும்: - தருமம்மறு படிவெல்லும் எனும்இயற்கை மருமத்தை கம்மாலே உலகம் கற்கும் வழிதேடி விதி.இந்தச் செய்கை செய்தான்;

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வையைத்_தமிழ்.pdf/102&oldid=921704" இலிருந்து மீள்விக்கப்பட்டது