பக்கம்:வையைத் தமிழ்.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இறவர்த கவிதை 95. படம் பிடித்துக் காட்டும் வகையில் பாராட்டுகின்ரு ரன்ருே? இந்தப் பண்பாடும் உளப்பாங்கும் காம் மேலே கண்டபடி எல்லாவற்றையும் இறையெனக் காணும் கண்ணுக்கும் உள்ளத்துக்குங்தான் அமையும் என்ற உண்மையைப் பலவிடங்களில பாரதியார் காட்டு கின்ருர். அவற்றுள் மிகச் சிறந்த ஒன்றினே ஈண்டு எடுத்துக்காட்ட விழைகின்றேன். 'உயிர்களெலாம் தெய்வமன்றிப் பிறவொன் றில்லை. ஊர்வனவும் பறப்பனவும் நேரே தெய்வம்; பயிலும்உயிர் வகைமட்டு மன்றி யிங்குப் - பார்க்கின்ற பொருளெல்லாம் தெய்வம் கண்டீர்" . (சுய. 18) என்று வாழும் உயிர்பொருள்களில் மட்டுமன்றி உயி ரற்ற பொருள்களிலுங்கூட எல்லாவற்றிலும் யாண்டும் அக்ேகமற நிறைகின்றவன் இறைவனே என்று காட்டி, அந்த இறைவனது கூறுகளாக உள்ள இவ்வுயிர்கள் அவ்வுண்மையை உணர்ந்து உளமொத்து இன்பில் வாழ வேண்டும் என்றும் எடுத்துக் காட்டுகின்ருர். இன்னும் பாரதியாரின் வசன கவிதை முழுவதி லும் இவ்வுண்மையை நன்கு காட்டக் காணலாம். மக்கள் சாகாவரம் பெற்று வாழ்வதற்கு இந்த உயர்ந்த பண்பாடு ஏற்றதாகும். இதை மனித குலத்தின்மேல் மட்டும் ஏற்றிக் காட்டுவதோடு அமையாது, சாதாரணக் கயிறு, கல், மண் முதலிய வற்றின் மேலும் ஏற்றிப் பாரதியார் காட்டுவது அவர் நூல் வழியே கற்றுக் கற்று அறிந்து மகிழ வேண்டு வதேயாகும். இவ்வாருன உண்மை நிலையினை உலகம் உண்டான காலங்தொட்டுப் பலப்பல அறிஞர் பாடிக் காட்டி அறிவித்துத் தமது இறவாத கவிதை வழி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வையைத்_தமிழ்.pdf/101&oldid=921700" இலிருந்து மீள்விக்கப்பட்டது