பக்கம்:வையைத் தமிழ்.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4 . வையைத் தமிழ் மட்டுமன்றிப் பறவை விலங்குகளையுங்கூடப் பக்கத் தில் அழைத்துப் பாராட்டவேண்டும் என்ற உண்மை யைக் குழந்தைகள்மேல் வைத்து, "கொத்தித் திரியும்.அந்தக் கோழி அதைக் கூட்டி விளையாடு பாப்பா! எத்தித் திரியும் அந்தக் காக்கை அதற்கு இரக்கப்பட வேணுமடி பாப்பா!' (பாப். 3) என அழகாகப் பாப்பாப் பாட்டிசைத்து மகிழ்விக் கிருர், - - --- குழந்தைகளுக்கு மட்டுமன்றி, இல்லறத்தில் வாழும் பெரியவர்களாகிய ஆணுக்கும் பெண்ணுக்கும், அல்லாத பிற மக்களுக்கும் உளநிறைவும் உழைப்புச் செல்வமுமே வாழ்வின் அடிப்படைகள் என்ற இறவாத உண்மையைப் பலவிடங்களில் தம் பாடல் ...முழுதும் காட்டிக்கொண்டே செல்கிருர் பாரதியார். அவற்றுள் இரண்டொன்றைக் காணல் கலம்; "ஆணும் பெண்ணும் கெரெனக் கொள்வதால் அறிவி லோங்கி இவ் வையம் தழைக்குமாம்; பூணும் நல்லறத் தோடிங்குப் பெண்ணுரு போந்து நிற்பது தாய்சிவ சக்தயாம். (புதுமைப். 4) என்று ஆணையும் பெண்ணையும் இணைத்ததோடு அமை யாது, அத்தாய்மை பிறவற்றினும் மேம்பட்ட சக்தி கிலேயில் சாகா வகையில் வைத் துப் போற்றக்கூடிய ஒன்று என விளக்கிச் செல்கிருர் உழைப்பின் சிறப்பை, 'வயிற்றுக்குச் சோறுண்டு கண்டிர்-இங்கு வாழும் மனிதர்எல் லோர்க்கும் பயிற்றி உழுதுண்டு வாழவீர்;-பிறர் . - பங்கைத் திருடுதல் வேண்டா." (முரசு. 23) என்ற அடிகளில் விளக்குவதோடு, இன்று நாட்டில் மக்கள் விழையும் சமதர்மச் சமுதாய வாழ்வையும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வையைத்_தமிழ்.pdf/100&oldid=921698" இலிருந்து மீள்விக்கப்பட்டது