பக்கம்:வையைத் தமிழ்.pdf/106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

"100 வையைத் தமிழ் விடுதலைவேண்டும் இருபதாம் நூற்ருண்டின் மணி நேர-நிமிட நேரக் காதலன்று தமிழருடையது. அவர் தம் பிணைப்பு எத்தனை பிறவி எடுத்தாலும் பிரிக்க முடியாதது. இதைத்தான் பாரதியார், 'நேற்றுமுன் ஞளில்வந்த உறவன்றடி-மிக நெடும்பண்டைக் காலமுதல் நோந்துவந்ததாம். இன்னும் கடைசிவரை ஒட்டிருக்குமாம்-இதற்கு எண்ணப் படுவதில்லை ஏடிகண்ணம்மா - என்று கண்ணம்மா என் காதலி'யில் நன்கு காட்டு கின்ருர். எனவே, காதல் என்பது கடவுளைப் போன்று என்று தோன்றியது, என்று மறைவது எனக் காட்டக் கூடாத தாய், கட்புலனாகாது உள்ளத்துணர்வாலேயே உய்த்து அறியும் தன்மைத்தாய், தன்னை மறந்தாரை வாழவைப்பதாய் அமையும் ஒப்பற்ற ஒன்ருகும். - லேயே நம் நாட்டுக் கடவுளரையெல்லாம் சத்தியோடு இணைத்துக் காட்டுகின்றனர் பெரியோர். யோகத்திலே நிற்கும் சிவசத்தியாகிய அந்த அன்னே தானே போகத்துள் போகமாய் நின்று உலகம் உய்ய அருள் செய்கின்ருள். இதையே சித்தியார், யோகி யாய் இருந்தெவர்க்கும் யோகத்தைப் புரியும் இறைவனே போகியாய் இருந்து போகத்தையும் அளிப்பன், எனக் காட்டுகின்றது. பாரதியார், யோசத்தி லேகிக ரற்றவள் உண்மையும் - ஒன்றென நன்றறிவாள்- உயர் போகத்தி லேயும் கிறைந்தவள் எண்ணரும் பொற்குவை தானுடையாள். (எங்கள் தாய். 27) எனப் பாடுகின்ருர். மேலும், அவர் தோத்திரப்பாடல் ஒன்றில் துறந்தாரைக்காட்டிலும் பெருமையுடையவர் இல்லறத்தில் இருந்து மற்றவரை வாழ வைத்துத் தாமும் வாழ்பவரே எனக் காட்டி நன்கு இதை விளக்குகிரு.ர். - i

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வையைத்_தமிழ்.pdf/106&oldid=921711" இலிருந்து மீள்விக்கப்பட்டது