பக்கம்:வையைத் தமிழ்.pdf/107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கடவுளும் காதலும் 101. துறந்தார் திறமை பெரிததி னும்பெரிதாகுமிங்குக் குறைந்தார்ைத் காத்துஎளி யிார்க்கு உணவீந்து குல்மகளும் அறந்தாங்கு மக்களும_பீடுழி வாழ் கென்ன அண்டமெல்லாம் சிறந்தாளும் நாதனப்போற்றிருத தொண்டர் செயும்தவமே. - (96) என்பது பாரதியார் வாக்கு. r - இனி, பாரதியார் கடவுளைப் போற்றுவதே காதல் நெறிதான் எனக் காட்டுகின்ருர்; கடவுள் வ பாட்டையே காதல் என்கின்ருர். மூன்று காதல்’ என்ற தலைப்பிலே அவர் சரசுவதி, இலக் குமி, காளி ஆகிய மூன்று தெய்வங்களையும் முன்னிறுத்தி, வழிபாடு ஆற்றுகின்ருர். காதல் இன்பத்துக்கும் கடவுள் உணர் வுக்கும் அடிப்படைப் புலனும் பொறிகளுமாகி கின்ற அன்னேயே காளி எனக் காட்டுகின்ருர். யாது மாகின்ருய் -காளி-எங்கும் நீகிறைந்தாய்; தீது நன்மை யல்லாம் -காளி-தெய்வ லீலயன்ருே பூதம் ஐந்துமானுய் -காளி-பொறிகள், ஐந்துமாளுய், போத மரகிகின்ருய் -காளி-பொறியை ಅನಿಲ್ಯ 1) இன்ப மாகிவிட்டாய் -காளி-என்னு ளேபுகுந்தாய்: பின்பு நின்னையல்லால் -காளி-பிறிது நானுமஉண்டோ? அன்பளித்துவிட்டாய் -காளி-ஆண்மை தந்துவிட்டாய்; துன்பம் நீககிவிட்டாய் -காளி-தொல்ல போக்கிவிட்டாய், ! r t . . . ." (3012) என்று பாரதியார் தம்மை மறந்து காளியொடு ஒன்றிப்பாடும் காதல் நெறிப் பாட்டில் கம்மை நாம் மறக்க முடிகிறதன்ருே - - . - இனி, கடவுளைப் பற்றிப் பாரதியார் கொண்ட கருத்தினேக் காண்போம். மதம் மதம் என்று மதம் பிடித்து, தன் தெய்வம் என்தெய்வம் என்று போராடும் நாகரிகக் காலத்தில் நாம் வாழ்கின்ருேம். பாரதியாரும் இந்தச் சமய வேறுபாட்டைக் கண்டவர் தாம். என்ருலும், சமயத்தின் பேராலேயே இலட்சக் கணக்கான கொலைகள் புரிந்து நாடு பிரிந்த அகாகரிக

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வையைத்_தமிழ்.pdf/107&oldid=921712" இலிருந்து மீள்விக்கப்பட்டது